லண்டனில் சட்ட விரோதமாக யானை முடி நகை விற்றவருக்கு சிறை!

illegally, sold, jewellery, யானை

லண்டனில் யானை முடியை பயன்படுத்தி செய்யப்பட்ட நகைகளை விற்பனை செய்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐல் ஆஃப் வைட் டவுன் லைனைச் சேர்ந்த ராஜ்தரன் மகாலிங்கம் (40) வெம்லியில் உள்ள ஈலிங் சாலையில் நகைக் கடை ஒன்றை நடத்தி வந்தார். இவர் கடையில் யானை முடியை வைத்து செய்யப்பட்ட நகை என்று கூறி சில நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு இணையம், சமூக ஊடகங்களில் தன்னிடம் யானை முடியால் செய்யப்பட்ட அதிர்ஷ்ட நகைகள் உள்ளன என்று விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரத்தை மெட் போலீசின் வனவிலங்குகள் குற்றம் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்ணில் பட்டது.

இதைத் தொடர்ந்து அவரது கடையில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது யானை முடியில் செய்யப்பட்டதாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளில் சிலவற்றை போலீசார் கைப்பற்றினர்.

அந்த யானை முடிகளை மரபியல் பரிசோதனைக்கு அனுப்பி, எந்த விலங்கின் முடி என்பதை ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த முடிகள் ஆப்ரிக்க மற்றும் ஆசிய யானைகளின் முடி என்பது உறுதியானது.

இதைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு அவருடைய கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த யானை முடியால் செய்யப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவை யானை முடியால் செய்யப்பட்டதுதான் என்பதை மகாலிங்கம் ஒப்புக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு நம்பர் 19ம் தேதி மகாலிங்கம் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 24ம் தேதி) குற்றம் உறுதியானதாக அறிவிக்கப்பட்டது.

இதைப் படிச்சீங்களலா: லண்டனில் மாஸ்க் போட சொன்ன ஊழியர் முகத்தில் எச்சில் துப்பிய பெண்ணால் அதிர்ச்சி!

24ம் தேதியே தண்டனையும் விதிக்கப்பட்டது. அவருக்கு 32 வாரம் சிறை தண்டனை மற்றும் 16 வாரங்கள் சஸ்பென்ஷன். யானை முடியால் செய்யப்பட்ட அனைத்து நகைகளும் பறிமுதல் செய்யப்படும்.

200 மணி நேரத்துக்கு சம்பளம் இல்லா வேலை வழங்கப்படும். 200 பவுண்ட் அபராதம் மற்றும் வழக்குச் செலவு 1500 பவுண்ட் சர்சார்ஜ் 140 பவுண்ட் செலுத்த வேண்டும் என்று ஹாரோ கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஆபத்தான விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய, வைத்திருக்கக் கட்டுப்பாடுகள் உள்ளன. இது பற்றி தெரியாத காரணத்தால் ராஜ்தரன் மகாலிங்கம் தற்போது சிறை தண்டனை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter