லண்டன்: மாஸ்க் போட சொன்ன ஊழியர் முகத்தில் எச்சில் துப்பிய பெண்ணால் அதிர்ச்சி!

Maskless woman, spits, ஊழியர்
(Image:: Jam Press)

லண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் முகக் கவசம் போடச் சொன்னதற்காக கடை ஊழியர் முகத்தில் பெண்மணி ஒருவர் எச்சில் துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது.

முகக் கவசம் அணிந்தால் கொரோனா பரவல் வாய்ப்பு குறையும் என்று அரசு மட்டுமல்ல தொற்றுநோயியல் நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். ஆனால், பலருக்கும் முகக் கவசம் அணிவது மிகப் பெரிய கொடூர தண்டனைப் போல உள்ளது.

லண்டனில் கிளப்பாம் காமன் டியூப் ஸ்டேஷனில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு அடையாளம் தெரியாத பெண்மணி ஒருவர் வந்துள்ளார்.

அவரிடம் முகக் கவசம் அணியும்படி கடையில் இருந்த பெண் ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால், கோபம் அடைந்த அவர் கடையில் இருந்தவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்.

கடைசியில் பில் கவுண்டரில் இருந்தவரிடம் தான் வாங்கும் பொருளுக்கு பில் போடும்படி சண்டை போட்டுள்ளார். ஆனால், முகக் கவசம் அணியாதவர்களிடம் விற்பனை செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

இதைப் படிச்சீங்களா: இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா மரணம்… அதிர்ச்சி புள்ளி விவரம்!

இதனால் கோபம் அடைந்த அந்த பெண்மணி என்னுடைய கணக்கில் பணம் உள்ளது. அப்படி இருந்தும் அதை ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள் என்று கத்தினார்.

பின்னர் கேஷ் கவுண்டரிலிருந்த ஊழியர் முகத்தில் எச்சில் உமிழ முயற்சி செய்தார்.

நல்ல வேளையாக கேஷ் கவுண்டரில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புத் திரை அமைக்கப்பட்டிருந்தது. அதனால் எச்சில் அந்த ஊழியர் மீது படாமல், தடுப்புத் திரை மீது பட்டு வழிந்துள்ளது.

அதன் பிறகும் ஆத்திரம் தீராத அவர் கடையில் இருந்த கிறிஸ்துமஸ் பொருட்களைக் கீழே தள்ளி எட்டி மிதித்து சண்டை போட்டார். அவருடன் வந்தவர் நடப்பவை அனைத்தும் வீடியோவாக எடுக்கப்படுவதைக் கண்டு அந்த பெண்மணியை அழைத்துச் சென்றார்.

ஊழியர் மீது எச்சில் உமிழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டுள்ளது. போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்காக சூப்பர் மார்க்கெட்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் கூட விதியை ஏற்க மறுத்து எச்சில் உமிழ்ந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter