உறவினர்கள் பாகிஸ்தான் சென்றதை மறைத்து ஒரு லட்சம் பவுண்ட் வரை உதவித் தொகை மோசடி செய்த பெண்!

(Image: Cavendish Press)

அத்தை, மாமா பாகிஸ்தான் சென்றதை மறைத்து அவர்களுக்கு அரசு வழங்கிய உதவித் தொகை ஒரு லட்சம் பவுண்ட் வரை பெற்ற பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் ஸ்டாக்போர்டுக்கு அருகில் உள்ள ஹீல்ட் கிரீன் நகரத்தைச் சேர்ந்தவர் ஷப்பா மஹ்மூத் (36). இவரது அத்தை, மாமா இங்கிலாந்தில் வசித்து வந்தனர். வயதானவர்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. அவரது அத்தைக்கு டிமென்ஷியா என்ற ஞாபக சக்தி இழப்பு நோயும், மாமாவுக்கு ஹெபடைட்டிஸ் மற்றும் சிறுநீரக செயல் இழப்பும் இருந்துள்ளது.

இவர்கள் இருவரும் 2013ம் ஆண்டு திருமணம் ஒன்றுக்காக பாகிஸ்தான் சென்றனர். பின்னர் அங்கேயே தங்கிவிட்டனர். இங்கிலாந்துக்கு அவர்கள் திரும்பி வராத நிலையில் அவர்களுக்கு அரசு வழங்கிய உதவித் தொகை அவர்கள் வங்கிக் கணக்கில் வந்துகொண்டே இருந்தது. இதை ஷப்பா மஹ்மூத் எடுத்து செலவு செய்து வந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அவர் மீது அரசு பணத்தை முறைகேடு செய்ததாக மான்செஸ்டர் மின்ஷல் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரசு வழங்கிய நிதி உதவியை முறைகேடாக ஷப்பா மஹ்மூத் பெற்று வந்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ஷப்பா மஹ்மூத்துக்கு ஒன்று முதல் 13 வயது வரை மொத்தம் எட்டு குழந்தைகள் உள்ளனர். கணவரும் ஸ்க்ரீசோஃபீனியா என்ற மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர்கள் வெளிநாடு சென்றதை அரசுக்கு அறிவிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியாது. இது போன்ற சட்டச் சிக்கல்களை புரிந்து கொள்ளும் திறன் தனக்கு இல்லை என்று அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஷப்பா மஹ்மூத்தின் குடும்ப நிலை, நடந்த தவறுக்கு அவர் படும் வேதனை உள்ளிட்டவற்றைப் பற்றி தெரியப்படுத்தினார். கணவருக்கு மனநல பாதிப்பு உள்ளது, எட்டு குழந்தைகளை வளர்க்க அவர் தேவை. அதிலும் கடைசி இரண்டு குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். அவர்களுக்கு தாயின் அரவணைப்பு தேவை.

பெரிய பெண்ணுக்கு 13 வயதாகிறது. சமூகத்தில் அவள் வளர தாய் தேவை. அரசின் இனி எந்த ஒரு உதவியையும் அவர் கோர மாட்டார் என்று கூறினார். இதை ஏற்ற நீதிமன்றம் அவரை விடுவிக்க முன்வந்தது. மேலும் அவர் மறுவாழ்வு மையத்துக்கு 15 நாட்கள் ஆலோசனை பெறவும், 150 நேரம் ஊதியமின்றி வேலை செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk