லண்டனில் 10 வயது சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம்… கொடூரத் தாய் சிறையில் அடைப்பு!

லண்டனில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 10 வயது சிறுவன் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவனது தயாரை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லண்டன் மெட் போலீசாருக்கு சிறுவன் பாதிக்கப்பட்டது தொடர்பாக போன் கால் வந்தது. அங்கு சென்று பார்த்தபோது சிறுவன் இறந்துகிடந்தான். அவன் யார், எப்படி இறந்தான், அந்த வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட பெண் யார் என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால், மெட் போலீஸ் தரப்பில் பதில் அளிக்கவில்லை. அதன் பிறகுதான் கைது செய்யப்பட்டது சிறுவனின் தாய் என்பது தெரியவந்தது.

சிறுவனின் தந்தை டீன் ஃப்ரீமேன் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ஹாலிவுட் நடிகர் பிராட்லி கூப்பர் ஆகியோரின் சிறப்பு புகைப்படக் கலைஞர் என்பது தெரிந்தது. தற்போது ஓல்காவுக்கும் டீன் ஃப்ரீமேனுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. டீன் ஃப்ரீமேன் தற்போது ஸ்பெயினில் உள்ளார். எதற்காக தன் சொந்த மகனை அந்த பெண் கொலை செய்தார் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஓல்கா ஃப்ரீமேன். சிறுவனின் பெயர் டைலான் ஃப்ரீமேன். சிறுவன் டைலான் மாற்றுத் திறனாளி என்று கூறப்படுகிறது. இதனால் 24 மணி நேரமும் அவனுக்கு மற்றவர்களின் கவனிப்பும் பராமரிப்பும் தேவை என்று தெரிகிறது. இதன் காரணமாக மனம் வெறுத்து அந்த பெண் தன் மகனையே கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிறுவனின் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி அவனைக் கொடூரமாக கொன்றிருக்கிறார் ஓல்கா.

ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் எதுவும் பேசவில்லை. தன்னுடைய பெயர், பிறந்த தேதியை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளார். பிரேதப்பரிசோதனை அறிக்கையில் சிறுவனின் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து வழக்கை நவம்பர் மாதம் மாதம் 4ம் தேதிக்கு நீதிபதி மார்க் லூகிராஃப்ட் ஒத்திவைத்தார். அதுவரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk