சாப்பாட்டின் மீது ஒரு கண் வையுங்கள்.. பார்வை பறிபோகலாம் – பிரிட்டன் ஆய்வு எச்சரிக்கை

சாப்பாட்டின் மீது ஒரு கண் வையுங்கள் என  சொல்வது, சும்மா இல்லை, பார்வையிழப்புக்கும் அது காரணம் ஆகக்கூடும் என்கிறது ஓர் ஆய்வு. இருபது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்குப் பிறகு, இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள், ஆய்வாளர்கள். செவ்விறைச்சி, பொறிக்கப்பட்ட உணவுகள், அடர் கொழுப்பான பால்பொருள்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் ஆகியவற்றை உணவாகக் கொண்டவர்களின் பார்வையில் கடுமையான பாதிப்பு இருந்ததை இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலகும் முடிவில் மாற்றமில்லை – இளவரசர் ஹாரி

(பிரிட்டன் ஜானல் ஆஃப் ஆப்தமாலஜி) பிரித்தானிய கண்நோயியல் ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, ஆரோக்கியமற்ற உணவுகளுக்கும் விழித்திரை மாக்குலர் சிதைவுக்கும் தொடர்பு உண்டு என்கிறது. இதனால் வயதாகும்போது கண்ணின் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டு, பொருள்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கான மையப்பார்வை பாதிக்கப்பட்டுவிடும். படிப்பது, வண்டியோட்டுவது போன்ற அன்றாடப் பணிகளைக்கூட செய்வதே சிரமம் ஆகிவிடும்.

அமெரிக்காவில் உள்ள நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் விவரப்படி, நாற்பது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 18 இலட்சம் பேர் விழித்திரை மாக்குலர் சிதைவுடன் வாழ்ந்துவருகின்றனர்; 73 இலட்சம் பேர் ட்ரூசன் எனப்படும் விழித்திரை மாக்குலர் சிதைவுக்கு முந்தைய பாதிப்பு நிலையில் உள்ளனர்.

நியூயார்க்கின் பஃபல்லோ பல்கலைக்கழகத்தின் முதுநிலை ஆய்வு எழுத்தாளரான மரு. ஆமி மில்லன், மெடிக்கல் நியூஸ் டுடே ஊடகத்துக்குப் பேசுகையில், “ நிறைய பேர், சாப்பாட்டுக்கும் உடல்பருமனுக்கும் இதயக்குழாய் நோய் அபாயத்துக்கும்தான் தொடர்பு என நினைக்கிறார்கள். அது சரியோ தவறோ வயதுமூப்புப் பார்வையிழப்பு அபாயத்துக்கு உணவும் காரணியாகும் என்றோ எனக்கு உறுதியாகத் தெரிந்திருக்கவில்லை.

விழித்திரை மாக்குலர் சிதைவை ஏற்படுத்தக்கூடியதாக உணவுமுறையும் இருக்கலாமோ என்பதை அறிய, ஒருவரின் ஒட்டுமொத்த உணவுமுறையும் எப்படி இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க விரும்பினோம். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் யாருக்கும் தொடக்கத்தில் விழித்திரை மாக்குலர் சிதைவோ அதற்கான அறிகுறியோ இல்லை; பிறகு அடிக்கடி ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கியவர்களுக்கு பெரும்பாலும் பார்வைக்குறைபாட்டு அபாயமும் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் முற்றியநிலை பார்வைபாதிப்பும் கண்டறியப்பட்டது” என்கிறார்.

இவ்வாய்பில், 66 வகையான உணவினங்கள் கணக்கில்கொள்ளப்பட்டன. பின்னர் அவை ஆரோக்கியமானவையாகவும் பதப்படுத்தப்பட்ட, பொறிக்கப்பட்ட மேற்கத்திய பாணி உணவு என்றும் வகைப்படுத்தப்பட்டன. உணவுப்பழக்கத்துக்கும் விழித்திரை மாக்குலர் சிதைவுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறியவில்லை என்றாலும், மேற்கத்திய உணவுமுறையைப் பின்பற்றுவோரிடம் மற்றவர்களைவிட மூன்று மடங்கு விழித்திரை மாக்குலர் சிதைவுக்கான வாய்ப்பு இருப்பதை அறியமுடிந்தது.

காற்று மாசுபாட்டால் 1,60,000 பேர் உயிரிழக்க வாய்ப்பு – பிரிட்டன் எச்சரிக்கை