இங்கிலாந்து முழுக்க என்.ஹெச்.எஸ் கொரோனா இறப்பு விகிதம் கணக்கீட்டில் வித்தியாசம்!

இங்கிலாந்து மருத்துவமனைகளில் கொரோனா காரணமாக ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக என்.ஹெச்.எஸ் தரவுகளில் நாடு முழுக்க 12.5 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்கள் பற்றி தினமும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒவ்வொரு மருத்துவமனையில் நிகழ்ந்த மரணங்கள் பற்றிய தரவுகளை என்.ஹெச்.எஸ் சேகரித்து வந்தது. ஆனால், அது பற்றிய முழுமையான தகவலை அது வெளியிடவில்லை. நாடு முழுக்க 135 மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா மரணத்துக்கு வயது மிக முக்கிய காரணமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறி வந்தனர்.

இங்கிலாந்தில் மார்ச் மாத இறுதியில் கொரோனா உச்சத்துக்கு சென்றது, அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் மற்றும் மே 15 வரை கொரோனாவின் தீவிரம் இருந்தது. இந்த காலகட்டத்தில் 42,850 அல்லது 85 சதவிகித மரணங்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பதிவானது. இது ஒவ்வொரு மருத்துவமனைக்கும் எத்தனை பேர் வந்தார்கள், எத்தனை பேர் இறந்தார்கள் என்பது பற்றிய முதல் நிலை தரவாகும்.

ஃபேக்கல்டி ஆஃப் இன்டன்சிவ் கேர் மெடிசின் டாக்டர் அலிசன் பிட்டர்ட் கூறுகையில், “இது மிகப்பெரிய வேறுபாடு, மிகப்பெரிய எண்ணிக்கையில் வித்தியாசம். இவ்வளவு பெரிய வேறுபாடு அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.

சொசைட்டி ஃபார் அக்யூட் மெடிசின் முன்னாள் தலைவர் டாக்டர் நிக் ஸ்க்ரிவன் கூறுகையில், “நீங்கள் எதிர்பார்ப்பதைவிட இதன் தாக்கம் பெரிதாக தெரிகிறது. இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இது ஏன் இப்படி வேறுபடுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்” என்றார்.