புதிய கொரோனா விதிகள் இன்றோ, நாளையோ வெளியாகாது! – ப்ரீத்தி பட்டேல் அறிவிப்பு

Priti Patel, quits, ப்ரீத்தி, ப்ரீத்தி படேல், Bullying, inquiry, கொரோனா

புதிய கொரோனா விதிமுறைகள் இன்றைக்கோ அல்லது நாளைக்கோ வெளியாக வாய்ப்பில்லை என்று உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அடுத்த வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படலாமா என்பதற்கு பதில் அளிக்கவில்லை.

இங்கிலாந்தில் கொரோனா பரவல் மீண்டும் புதிய புதிய உச்சத்தை படைத்து வருகிறது. இதனால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது, ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஒன்றாக சேர்ந்து உடற்பயிற்சி செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட மேலும் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று செய்திகள் தெரிவித்தன. ஆனால், இன்றைக்கோ, நாளைக்கோ அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வராது என்றும் தற்போது உள்ள கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் கூறியுள்ளார்.

ஐடிவி-க்கு அவர் அளித்த பேட்டியில் அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகுமா என்று கேட்டபோது, “இன்றோ, நாளையோ புதிய விதிமுறைகளைக் கொண்டுவருவது பற்றி நாங்கள் யோசிக்கவில்லை” என்றார்.

தற்போது கட்டாயமாக வீட்டிலேயே இருக்க வேண்டும், மிகக் குறைந்த மிக அவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியே செல்லலாம் என்பது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

அப்படி இருந்தும் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1564 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு என்.ஹெச்.எஸ் பரபரப்பாக இயங்கி வருகிறது.

இந்த சூழலில் இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது பற்றி அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதும் தீவிரமாகி வருகிறது.

இந்த பெருந்தொற்று காலத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிரேசிலில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter