லண்டன் பல்கலைக்கழகங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மாணவர்கள்

சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக லண்டன் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து பிரிட்டனின் உயா்கல்வி புள்ளிவிவர நிறுவனமான ‘ஹெசா’ லண்டனில் வெளியிட்ட புள்ளி விவரங்களில், “லண்டனில் சீன மாணவா்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. சீனாவிலிருந்து 25,650 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். 7,460 மாணவா்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தையும், இந்தியா 7,158 மாணவா்களுடன் 3-ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

31ம் தேதி நள்ளிரவு பிரிட்டன் வெளியேறுகிறது – பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

இத்தாலி 5,625 மாணவா்களுடன் 4-ஆம் இடத்திலும், பிரான்ஸ் 4,650 மாணவா்களுடன் 5-ஆம் இடத்திலும் உள்ளனா்.

லண்டனில் கடந்த 2018-19ஆம் ஆண்டில் பயின்ற இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 34.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, இந்திய மாணவா்கள் 3-ஆம் இடத்தை பெற்றுள்ளனா். 4-ஆம் இடத்தை இத்தாலியும், 5-ஆம் இடத்தை பிரான்ஸும் பெற்றுள்ளன.

பிரிட்டன் அரசு சா்வதேச மாணவா்களுக்கு படிப்புக்கு பிந்தைய விசாவை 2 ஆண்டுக்கு வழங்குவதை அண்மையில் மீண்டும் அறிமுகப்படுத்தியதன் காரணமாக அங்கு பயில விரும்பும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு பட்டதாரிகள் அவா்களின் படிப்புக்குப்பின் வேலை தேடுவதற்கு பிரிட்டன் அரசு நீண்ட காலம் அனுமதி அளிக்கிறது.

கடந்த 2018-19 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகங்களில் மொத்த சா்வதேச மாணவா்களின் எண்ணிக்கை 1,25,035 ஆக இருந்தது. இது 2017-18 ஆம் ஆண்டை விட 5.8 சதவீதம் அதிகரித்து, கடந்த ஆண்டு வளா்ச்சி விகிதத்தில் 5.3 சதவீதமாக உயா்ந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு விரைவில் விசா – பிரிட்டன்