2 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த தாய்!

Officers name woman, கொலை, தற்கொலை, லண்டன்
(Image: Met Police)

மேற்கு லண்டனில் இரண்டு வயது பெண் குழந்தையைக் கொலை செய்துவிட்டு, தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் யார் அவர்கள் என்பது பற்றிய விவரம் வெளியாகத் தொடங்கியுள்ளது.

மேற்கு லண்டன் ஹவுன்ஸ்லோவின் ஓல்ட் மெடோ லேன் முகவரிக்கு கடந்த திங்கட்கிழமை மாலை 4.08 மணி அளவில் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

லண்டன் ஆம்புலன்ஸ் சேவை துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் மெட் போலீசார் வீட்டுக்குள் நுழைந்தபோது பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளனர்.

அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவ பணியாளர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர் என்று அறிவித்தனர். இந்த கொலை தொடர்பாக யாரையும் சந்தேகிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இறந்து கிடந்த பெண்ணின் பெயர் சிவாங்கி பாகோன் (25) என்பதும், சிறு குழந்தையின் பெயர் ஜியானா பாகோன் என்பதும் தெரியவந்துள்ளது. ஜியானாவை சிவாங்கி கொலை செய்துவிட்டு, பிறகு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே கொலை தொடர்பான முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிவாங்கி என்.ஹெச்.எஸ் மருத்துவமனை ஒன்றில் மயக்க நிபுணரின் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

சிவாங்கியும் ஜியானாவும் தனியாக வசித்து வந்துள்ளனர். சிவாங்கிக்கு கணவர் இருப்பது போலத் தெரியவில்லை என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிவாங்கி என்ற பெயர், தோற்றம் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள் தெற்காசியாவைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று இங்கிலாந்து ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எந்த நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.

இந்த நிகழ்வு குறித்து விசாரணையை வழிநடத்தும் மெட் போலீஸ் டி.சி.ஐ ஹெலன் ரான்ஸ் கூறுகையில், “இது ஒரு சோகமான சம்பவம். இளம் தாய் சிவாங்கி மற்றும் அவரது மகள் இறந்ததற்கு நாங்கள் வருத்தப்படுகிறோம்.

விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. அவர்கள் இறந்த சூழல் குறித்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். விசாரணை தொடர்கிறது” என்றார்.

இதைப் படிச்சீங்களா..! – ஃபைசர் தடுப்பூசியால் அலர்ஜி பிரச்னை வரலாம்! – புதிய எச்சரிக்கை

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter