விதிமுறையை மீறி கூட்டம்… திருமணம் நடந்த இடத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம்!

(Image: Met Police)

லண்டன், அக்டோபர் 16, 2020: லண்டனில் விதிமுறையை மீறி திருமணத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியதால் போலீசார் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தினர். திருமணம் நடந்த இடத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமண வரவேற்புக்கு கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விருந்தினர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்கு லண்டனில் சவுத்தாலில் உள்ள டுடர் ரோஸில் கடந்த அக்டோபர் 13ம் தேதி மாலை திருமண நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

London: Owner of wedding venue that allowed event with 100 people reported for £10,000 fine#UKNews #UKTamilNews #MetropolitanPolice

Posted by Tamizh Selvi on Friday, 16 October 2020

இந்த திருமண விழாவில் விதிமுறையை மீறி அதிக அளவில் விருந்தினர்கள் கூட்டப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அங்கு மிக அதிக கூட்டமாக, துளி கூட சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படாமல் விழா நடப்பதை அவர்கள் பார்த்தனர்.

திருமண விழாவில் 15 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறையை மீறியதாலும், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததாலும் அங்கிருந்தவர்களை போலீசார் வெளியேற்றினர். திருமண விழா ஏற்பாட்டாளருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டது.

இது குறித்து பி.சி.யு கமாண்டர் தலைமை கண்காணிப்பாளர் பீட்டர் கார்னர் கூறுகையில், “இது மிகவும் ஆபத்தான முட்டாள்தனமான விதிமுறை மீறல் ஆகும். வைரஸ் தொற்று பரவாமல் இருக்க விதிமுறைகளை உருவாக்கப்பட்டுள்ளன. திருமணங்களில் அதிக எண்ணிக்கையில் விருந்தினர்கள் பங்கேற்காமல் இருக்கும் கட்டுப்பாடுகள் பல மாதங்களாக நடைமுறையில் உள்ளன. அப்படி இருக்கும் சட்டத்தை மீறியுள்ளனர்.

இட உரிமையாளர்கள் விதிமுறைகளை அமல்படுத்தவோ, அல்லது விருந்தினர்களை பாதுகாப்பாக வைக்கவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதால் அவருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் வைரஸ் தொற்று பரவலில் இருந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. லண்டன் முழுவதும் வைரஸ் தொற்று வேகம் அதிகரித்து வருகிறது.

விதிமுறைகளை மீறி தங்களைத் தாங்களே ஆபத்துக்குள்ளாக்கும் நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது மெட் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter

Related posts

15 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவு… டிசம்பரில் அறிமுகம்?

Editor

லண்டன்: மூன்று வயது மகன், மனைவியைக் கொலை செய்த கொடூர தமிழர்!

Editor

விமானத்தில் புகை? அவசரமாகத் தரை இறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்!

Editor