அடுத்த வாரத்தில் 5.2 லட்சம் டோஸ் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி ரெடியாகிவிடும்!

Oxford vaccine protection, கொரோனா, தடுப்பூசி, AstraZeneca, Covid, vaccine
(Image: AFP image)

இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் தயாரித்துள்ள ஆஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 5.3 லட்சம் டோஸ் இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக உலகம் முழுவதும் முன்னணி ஆய்வு நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறங்கின. இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகமும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.

இறுதிக்கட்ட பரிசோதனையில் வெளியான சில புள்ளிவிவர குறைபாடு காரணமாகத் தடுப்பூசி பின்னடைவைச் சந்தித்தது. இருப்பினும், சில மாறுதல்கள் செய்வதன் மூலம் மிகப்பெரிய அளவில் பலன் அளிக்கும் வகையில் தடுப்பூசியை மாற்ற முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே 5.3 லட்சம் டோஸ் தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையாள மிகவும் எளிமையானது என்பதால் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரும்படி தேர்வு செய்யப்பட்ட மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

80 வயதைக் கடந்தவர்கள், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாகத் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இங்கிலாந்து அரசு 100 மில்லியன் டோஸ்களுக்கு ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது. இதன் மூலம் ஐந்து கோடி பேருக்கு தடுப்பூசி போட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஃபைசர் தயாரித்த தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி தட்பவெப்ப நிலையில் பராமரிக்க வேண்டும். ஆனால், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் தயாரித்த தடுப்பூசியை சாதாரண குளிர்சாதன பெட்டியிலேயே பராமரிக்க முடியும் என்பது சாதகமான விஷயமாகும்.

இந்த தடுப்பூசியை இரண்டு டோசாக மக்களுக்கு வழங்க வேண்டும். முதல் தடுப்பூசியை பெற்றுக் கொண்டதிலிருந்து நான்கு முதல் 12 வாரங்களுக்குள் இரண்டாவது டோசை வழங்கிவிட வேண்டும் என்று தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய தி மெடிசன் அன்டு ஹெல்த்கேர் ப்ராடக்ட்ஸ் ரெகுலேட்டரி ஏஜென்சி தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று சுகாதாரத் துறை செயலாளர் ஹென்காக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter