1790ல் பிரிட்டனில் பயன்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் ஷூ – அட ஆச்சர்யமா இருக்கே!

எங்கு திரும்பினாலும், எங்கு பார்த்தாலும் கொரோனா கொரோனா தான்… இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டாவது நாளாக ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இங்கிலாந்து ஒருவித அசாதாரண சூழலில் தன்னை இயக்கி வருகிறது.

மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். சாலைகளில் ஆள் நடமாட்டம் முக்கால்வாசி குறைந்துவிட்டது. தனிமையில் இருப்பது வேறு; குடும்பத்துடன் ஒன்றாக தனிமையில் இருப்பது வேறு. மன அழுத்தம் என்பது இவ்விரு சம்பவங்களுக்கும் வேறுபடும்.

ஆகையால் இந்த செய்தி சற்று மன திசை திருப்புதலுக்காக…

செய்தி என்பதை விட சிறு தகவல் எனலாம். அதாவது பிரிட்டனில் 1790ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் ஒரு ஜோடி காலனி இது.

வரலாற்றுகளை ஆய்வு செய்யும் பிரபல மரியானா அமரால் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.