எரிபொருள் கார்கள் நிறுத்தம் – பிறநாடுகளுக்கு முன் உதாரணமாகும் பிரிட்டன்

Britain Tamil News
Britain Tamil News

லண்டன்: பெட்ரோல், டீசல் மற்றும் கலப்பின கார்களின் விற்பனையை 2035ல் தடை செய்து பிரிட்டன் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியாக, இந்த திட்டத்தை
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டு உள்ளார். மேலும் நவம்பர் மாதம் COP 26 என அழைக்கப்படும் ஐ.நா. காலநிலை மாற்ற மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் ஐக்கிய இராஜ்ஜியத்தை சுற்றுச்சூழல் தரத்தை உயர்த்த இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கனடா போன்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

புவி வெப்பமடைதலை எதிர்த்து போடப்பட்ட 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான COP 26 இரண்டு வார கால மாநாட்டை பிரிட்டன் பிதமர் போரிஸ் ஜான்சன், இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே மற்றும் இயற்கை ஆர்வலரான டேவிட் அட்டன்பரோவுடன் இணைந்து தொடங்கி வைக்கிறார்.

COP26 மாநாட்டை தொடங்கி வைப்பது, இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றம் அடைய ஒரு முக்கியமான வாய்ப்பாகும்” என்று ஜான்சன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

லண்டனில் சமோசா வாரம் எப்போது தெரியுமா?