கொரோனா ஊரடங்கு… ஏமாற்றப்பட்டதாக கருதும் போரிஸ் ஜான்சன்!

PM bounced lockdown, கொரோனா, ஊரடங்கு, போரிஸ் ஜான்சன்

கொரோனா 2ம் முழு ஊரடங்கு தொடர்பாக தான் ஏமாற்றப்பட்டதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் கருதுவதாகவும் கோபத்துடன் இருப்பதாகவும் அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவே மிக அவசரமாக ஊரடங்கு முடிவை அறிவித்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட நான்கு மடங்கு அதிக உயிரிழப்புகள் தற்போது ஏற்படும். ஒரு நாளைக்கு நான்காயிரம் பேருக்கு மேல் உயிரிழக்கும் சூழல் உள்ளது என்று அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்தே ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படாது என்று கூறி வந்த போரிஸ் ஜான்சன், ஊரடங்கைக் கொண்டு வரும் முடிவில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், ஒரு நாளைக்கு நான்காயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்பது எல்லாம் சரியான தகவல் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்தே பிரதமர் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார் என்கின்றனர் அமைச்சரவை சகாக்கள்.

குறையும் கொரோனா…

தற்போது கொரோனா வைரஸ் பரவல் மற்றும் உயிரிழப்பு குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 162 ஆக பதிவான உயிரிழப்பு இந்த வாரம் 15 ஆகக் குறைந்துள்ளது.

முந்தைய ஞாயிற்றுடன் முடிந்த ஒரு வாரத்தில் 23,254 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஞாயிறுடன் முடிவடைந்த வாரத்தில் அது 2,682 குறைந்து 20,572 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் டெய்லி மெயில் ஊடகத்திடம் பேசிய அமைச்சர் ஒருவர், கொரோனா ஊரடங்கு என்ற நிலைக்குத் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக போரிஸ் ஜான்சன் உணர்கிறார் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த அமைச்சர் யார் என்ற தகவலை டெய்லி மெயில் வெளியிடவில்லை.

மேலும் ஊரடங்கு முடிவை எடுக்க அவருக்கு அளிக்கப்பட்ட கொரோனா புள்ளிவிவரங்கள் எல்லாம் தவறானவை என்று தற்போது தெரியவந்துள்ள நிலையில் அவர் கவலையுடன் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த விவரங்கள் எல்லாம் தெளிவாகக் கூறப்பட்டிருந்தால் ஊரடங்கு முடிவை எடுக்க அவர் யோசித்திருப்பார், வேறு முடிவுகளை அவர் எடுத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் கோபம் வந்தது உண்மை, ஏமாற்றப்பட்டதாக கருதவில்லை என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

இதற்கிடையே டிசம்பர் 2ம் தேதிக்கு முன்னதாகவே கொரோனா ஊரடங்கை முடிக்க வேண்டும் என்று கன்சர்வேட்டிவ் கட்சியினர் வலியுறுத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter