கொரோனாவை வென்று சிறந்த நாட்டை உருவாக்குவோம்! – போரிஸ் ஜான்சன் உறுதி

(Image: BBC)

லண்டன், அக்டோபர் 6, 2020: கொரோனாவை வென்று சிறந்த நாட்டை உருவாக்கப் போவதாக கன்சர்வேட்டி மாநாட்டில் பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருமான போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாடு இன்று இணைய வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் நடந்தது. இந்த மாநாட்டில் போரிஸ் பேசினார். அப்போது:

இரண்டாம் உலகப் போரில் இருந்து மீண்டு எழுந்தது போன்று கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வோம்.

புதிய ஜெருசலேமை நான் உருவாக்க விரும்புகிறோம். அனைவருக்கும் வாய்ப்பு, மேம்பட்ட குடியிருப்புகள், மருத்துவ வசதிகள் கொண்டதாக அது இருக்கும்.

பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு இங்கிலாந்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிடாது. அதற்கு உத்வேகம் அளிக்க முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும்.

இங்கிலாந்து கொரோனா வைரசுக்கு எதிராக போரிட்டு வருகிறது. கூட்டு முயற்சி காரணமாக இந்த போரில் வெல்வோம்.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்த அரசு இரவும் பகலும் அயராது உழைத்து வருகிறது. விரைவில் வெற்றி காணும்.

மிகவும் இருண்ட தருணங்களிலும் கூட பிரகாசமான எதிர்காலத்தை நாம் காணலாம்.. அதை எப்படி உருவாக்குவது என்று காணலாம்… நாம் அனைவரும் இணைந்து அதை கட்டமைப்போம்.

தொற்றில் இருந்து மீண்ட பிறகு வெறும் பழுது பார்க்கும் வேலையை நாம் செய்யப் போவது இல்லை.

பசுமை ஆற்றலில் இங்கிலாந்து உலகத் தலைவனாக ஆக, கடல் காற்றில் இருந்து மின்சார உற்பத்தியை மேற்கொள்ள 160 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் 60 ஆயிரம் புதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

2030க்குள் 40 புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter