பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு இரண்டு ஆண்டு சிறை!

Politician, death threats, Theresa may, கொலை, மிரட்டல், தெரசா மே
(Image: businessgreen.com)

இங்கிலாந்து பிரதமராக தெரசா மே இருந்த போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக இளைஞர் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமராக தெரசா மே இருந்த போது அவருக்கு ஸ்லோவைச் சேர்ந்த வாஜித் ஷா என்ற (27) இளைஞர் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

தெரசா மே மட்டுமின்றி உள்துறை செயலாளராக இருந்த லார்ட் பிளங்கெட், பரோனஸ் லிஸ்டர், நாடாளுமன்ற உறுப்பினர் டான் தேசி, கரோலின் நோக்ஸ், முன்னாள் எம்பி மார்க் லாங்காஸ்டர் ஆகியோருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் தேசி மற்றும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் லார்ட் லான்காஸ்டர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டிருந்த இமெயிலில் அவர்கள் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் போலீசார் அறிவுறுத்தினர்.

தனக்கு வந்த கொலை மிரட்டலால் தான் மிகவும் கவலைப்படுவதாக பிரதமராக இருந்த தெரசா மே கவலை தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து வாஜித் ஷா கைது செய்யப்பட்டு அவர் மீதான வழக்கு சௌத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது பலருக்கும் அவர் மிரட்டல் அனுப்பியது தொடர்பாகவும் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டவர்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்ப நடந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது பற்றியும் விவரிக்கப்பட்டது.

போலீஸ் தரப்பில் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டாலும், குற்றவாளி தரப்பில் ஷாவுக்கு அறிவுத்திறன் (ஐகியூ) சற்று குறைவாக உள்ளது. ஆனால், அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் இல்லை.

அப்பாவியான அவர் மீதான குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதைப் படிச்சீங்களா: ஊழியர்களை மிரட்டிய விவகாரம்… ப்ரீத்தி படேல் நன்னடத்தை மீறியதாக அறிவிப்பு!

ஆனால் தி தாமஸ் வேலி போலீஸ் தரப்பிலோ, ஷா முதன் முறையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பிறகும் கூட தொடர்ந்து மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பிக் கொண்டே இருந்தார்.

இதன் மூலம் மற்றவர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் மற்றும் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்” என்று கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் தெரசா மே உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக வாஜித் ஷாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter

Related posts

மீண்டும் கொரோனா… பப் மூடுவதாக தொடர்ந்து வெளியாகும் அறிவிப்பு!

Editor

போதை பொருள் வைத்திருந்ததாக துபாய் சிறையில் வாடும் 23 வயது பிரிட்டிஷ் விமானப் பணிப்பெண்!

Editor

மாஸ்க் அணிவதில் செய்யும் சிறு தவறும் கொரோனாவுக்கு வழிவகுத்துவிடும்! – சுகாதார பணியாளர்கள் எச்சரிக்கை

Editor