கொரோனா – ஆயுர்வேத சிகிச்சையால் நலம் பெற்றாரா இளவரசர் சார்லஸ்? உண்மை என்ன?

prince charles corona virus england ayurveda

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து சார்லஸ் அதிலிருந்து மீண்டு இருக்கிறார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சுய தனிமைப்படுத்தலில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் மாஸ்க் அணியும் சூழல் உருவாகும் – லண்டன் சுகாதாரத்துறை நிபுணர்

ஆயுர்வேத மருத்துவ முறைகளின் படி வழங்கப்பட்ட சிகிச்சையால் சார்லஸ் குணமடைந்ததாக, மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை வழங்கிய சிகிச்சையின் மூலம் அவர் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டதாக கூறப்பட்டது.

ஆனால், பிரிட்டன் இத்தகவலை மறுத்துள்ளது. இதுகுறித்து, இளவரசர் சார்லஸின் செய்தித் தொடர்பாளர் எல்லா லின்ச் கூறுகையில், “இந்த தகவல் தவறானது. வேல்ஸ் இளவரசர் இங்கிலாந்தில் உள்ள என்.எச்.எஸ் (தேசிய சுகாதார சேவை) மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றினார், அதற்கு மேல் எந்த சிகிச்சையும் அவர் பெறவில்லை” என்று இந்தியன் எக்ஸ்பிரஸி டம் தெரிவித்துள்ளார்.

36,000 ஊழியர்களை தற்காலிகமாக சஸ்பென்ட் செய்கிறதா பிரிட்டிஷ் ஏர்வேஸ்?