பிரிட்டனில் கொரோனா ஆர் விகிதம் மிகப் பெரிய அளவில் குறைந்தது!

கொரோனா, Covid, R number fallen
(Image: telegraph.co.uk)

பிரிட்டனில் கொரோனா பரவல் வேகத்தைக் கணக்கிடும் ஆர் விகிதம் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது நம்பிக்கையை அளிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் கடந்த ஜூலை, ஆகஸ்டில் கொரோனா பரவல் மிகவும் குறைவாக இருந்தது. செப்டம்பர் தொடக்கத்தில் கூட கொரோனா தொற்று விகிதம் எனப்படும் ஆர் நம்பர் 1 என்ற அளவில் இருந்தது.

அதாவது, ஒரு லட்சம் பேரில் கொரோனா பரவல் எத்தனை பேருக்கு நிகழ்கிறது என்பதையே ஆர் நம்பர் என்கின்றனர். ஆர் நம்பர் அதிகரித்தால் தொற்று வேகமாகிறது என்று அர்த்தம்.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் இருந்ததைப் போன்று இங்கிலாந்தில் கொரோனா தொற்று விகிதம் ஆர் நம்பர் 1 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. தற்போது ஆர் எண் விகிதம் 1 முதல் 1.2 என்ற அளவில் உள்ளது.

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையின் வேகம் குறைந்துள்ளதாகத் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததற்கு முந்தைய நாள் வரையிலான வாரத்துக்கான கொரோனா பரவல் விவரங்களை தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதன் படி வட மேற்கு இங்கிலாந்தில் கொரோனா பரவல் விகிதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தெற்கு மற்றும் மிட்லாட்ஸில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

வடக்கு அயர்லாந்தில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது. வேல்சில் அதற்கு எதிர் மாறாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஏறவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் ஸ்காட்லாந்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா: தீபாவளிக்காக கொரோனா விதிமுறைகளை மீற வேண்டாம்… ரிஷி சுனக் வேண்டுகோள்!

நவம்பர் 6ம் தேதி நிலவரப்படி இங்கிலாந்தில் 85ல் ஒருவருக்கு அதாவது கிட்டத்தட்ட 620,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேல்சில் 85க்கு ஒருவர் அதாவது 35,300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு அயர்லாந்தில் 105க்கு ஒருவர் அதாவது 18 ஆயிரம் பேரும், ஸ்காட்லாந்தில் 135க்கு ஒருவர் அதாவது 40 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 12 (வியாழன்) இங்கிலாந்தில் 33,470 பேருக்கு தொற்று உறுதியானதாக அரசு அறிவித்திருந்தது. இது அறிகுறியுடன் உள்ள மக்கள் அதிக அளவில் பரிசோதனை செய்ய முன் வருவதைக் காட்டுகிறது.

ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரும் மிகப்பெரிய அளவில் சமூக ஒன்று கூடலில் ஈடுபட்டனர். இதுவே தற்போது தொற்று அதிகரிக்கக் காரணமாகிவிட்டது என்று நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter