ரீடிங்கில் 13 வயது சிறுவன் கொலை… சிறுமி உள்பட ஐந்து பேர் கைது!

stabbing, teenagers, arrested, கொலை
கொலை நடந்த இடத்தில் போலீசார்! (Image: PA Media)

பெர்க்‌ஷையர் ரீடிங்கில் 13 வயது சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமி உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெர்க்‌ஷையர் ரீடிங், எம்மர் கிரீன், பக்ஸ் பாட்டம் ஃபீல்ட் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி அளவில் சிறுவன் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தேம்ஸ் வேலி போலீசாருக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை விரைந்தன.

சிறுவனை பரிசோதித்த மருத்துவ பணியாளர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டான் என்று அறிவித்தனர்.

சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்தது யார் என்று தெரியாமல் போலீசார் விசாரணையில் இறங்கினர்.

இது தொடர்பான தகவல் தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் கொலை தொடர்பாக ஒரு சிறுமி உள்பட ஐந்து பேரைச் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். அனைவரின் வயதும் 13, 14 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையை இவர்கள்தான் செய்தார்களா, எப்படி செய்தார்கள், கொலைக்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

இதைப் படிச்சீங்களா: கொரோனா பரவல் தடுக்க புதிய தேசிய அளவிலான முழு ஊரடங்கு கட்டுப்பாடு வேண்டும்!

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூன்று மணி முதல் மாலை 4.30 மணி வரை அந்த பகுதியில் சென்றவர்கள், கொலை தொடர்பாக ஏதேனும் வித்தியாசமான காட்சிகள் கண்டிருந்தால் அது பற்றி போலீசில் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த பகுதி நாயை அழைத்துக் கொண்டு வாக்கிங் செல்பவர்களுக்கு பிடித்தமான இடம். பலரும் இங்கு வாக்கிங் சென்று வருவார்கள் என்பதால் நிச்சயம் யாராவது இந்த கொலை சம்பவத்தை பார்த்திருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் இருந்தால் அதை கொடுத்து உதவும்படியும் கேட்டுள்ளனர்.

13 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதும், இது தொடர்பாக சிறுமி ஒருவர் உள்பட ஐந்து டீன் ஏஜ் சிறுவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter