பிரிட்டனின் மிக மோசமான ரேப்பிஸ்ட் – வேதனையுடன் தீர்ப்பளித்த கோர்ட்

Image Credit - The Telegraph
Image Credit - The Telegraph

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் இன்று பிரிட்டனின் மிக மோசமான ரேப்பிஸ்ட் (Rapsit) என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

36 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா, மான்செஸ்டர் சிட்டி சென்டர் அபார்ட்மெண்டிற்கு அருகிலுள்ள பார்கள் மற்றும் கிளப்புகளில் தன் வயது ஒத்த இளைஞர்களுக்கு GHB எனும் மருந்தை செலுத்தி, அவர்களை மயக்கமடைய செய்து, பிறகு பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

மேலும் படிக்க – சுலைமானி கொலை விவகாரத்தில் ‘அதே நிலைப்பாட்டில்’ உள்ளோம் – பிரிட்டன்

நான்கு தனித்தனி விசாரணைக்குப் பிறகு, இன்று தான் முதல் முறையாக அவர் குற்றவாளி என்பது நிரூபணமாகியுள்ளது. சினகா, ஜனவரி 2015 முதல் ஜூன் 2017 வரை 48 வெவ்வேறு ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

ஆனால் அவர் குறிவைத்த பெரும்பான்மையான ஆண்கள் தாங்கள் தாக்கப்பட்டதை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பதால், பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை நூற்றுக்கணக்கானதாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தனித்தனியாக பாதிக்கப்பட்ட 190 பேரின் வீடியோ மற்றும் பிற ஆதாரங்கள் போலீசாரிடம் உள்ளன.

குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, “நீங்கள் ஒரு தீய தொடர் பாலியல் பிரடேட்டர். நகர மையத்திற்குள் ஒரு நல்ல இரவை கொண்டாட வந்த இளைஞர்களை இரையாக்கி இருக்கிறாய்” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க – லண்டனில் உள்ள ஹை கமிஷன் ஆஃப் இந்தியா – எமெர்ஜென்சி நம்பர் என்ன?