வேலை இழப்பைத் தவிர்க்க கூடுதல் நிதி அறிவித்த ரிஷி சுனக்!

Rishi Sunak
ரிஷி சுனக் கோப்புப் படம்!

பப், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட உணவு சேவைத் துறையில் ஏற்படும் வேலை இழப்பைத் தவிர்க்க புதிய பம்பர் ஃபர்லோ தொகுப்பை நிதி அதிபர் ரிஷி சுனக் இன்று வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருவதால் லட்சக் கணக்கில் வேலை இழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அரசு அறிவித்த உதவித் திட்டத்தால் பெரிய அளவில் வேலை இழப்பைத் தவிர்க்க முடியாது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் வணிகங்களுக்கான புதிய ஊதிய திட்டத்தை நிதித் துறை அதிபர் ரிஷி சுனக் இன்று வெளியிட்டார்.

தற்போது நிலை 3 எனப்படும் அதிதீவிர கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் மட்டுமே பப், பார்கள் மூடப்படுகின்றன.

அதே நேரத்தில் மூட வேண்டிய கட்டாயத்தில் இல்லாத வணிகங்கள் கூட வருவாய் இழப்பை எதிர்கொள்கின்றன என்றார்.

இன்றைக்கு எட்டு பில்லியன் பவுண்ட் அளவுக்கு அவர் திட்டங்களை அறிவித்தார்.

அதில் முக்கியமானவை:

புதிய வேலை பாதுகாப்புத் திட்டம்.

உதவியைப் பெற பணியாளர்கள் குறைந்தது 20 சதவிகித மணி நேரம் பணியாற்றி இருக்க வேண்டும்.

நிறுவனங்கள் ஐந்து சதவிகித ஊதியத்தை வழங்கும். இது 55 சதவிகிதத்தில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.

சுய தொழில் புரிபவர்களுக்கான மானியம் 3,750 பவுண்ட் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய திட்டமான கட்டுப்பாடு நிலை 2 மற்றும் 3ல் உள்ள நிறுவனங்களுக்கு பொருந்தும்.

புதிய திட்டத்தால் இங்கிலாந்து அரசுக்கு மாதத்துக்கு 200 மில்லியன் பவுண்ட் கூடுதலாக செலவாகும்.

சுய வேலைவாய்ப்பு புரிபவர்களுக்கான திட்டத்தின் கீழ் 3.1 பில்லியன் பவுண்ட் செலவாகும்.

புதிய திட்டமானது நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது” என்றார்.

உணவு சேவைத் துறையில் பணியாற்றும் ஒருவர் மாதத்துக்கு 1100 பவுண்ட் பெறுகிறார் என்றால், புதிய திட்டத்தின் கீழ் அவர் மாதத்துக்கு 807 பவுண்ட் மட்டுமே பெறுவார்.

ஒருவர் மாதத்துக்கு 20 சதவிகித வேலை புரிந்தால் 73 சதவிகித சம்பளத்தைப் பெறுவார்.

ரிஷி சுனக்கின் திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter