பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்க சலுகைகள் – ரிஷி சுனக் அதிரடி

rishi sunak, britain tamil news, latest tamil news, uk tamil news, ரிஷி சுனக், பிரிட்டன் தமிழ் செய்திகள்

கொரோனா பரவலால் சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், தொழில் நிறுவனங்களை காக்கவும், தொழிலாளர்களின் வேலையிழப்பை தடுக்கவும், பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.

கொரோனா பரவலை தடுக்க, உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தொழில் துறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவும், ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளன.

இங்கிலாந்தில் பலி எண்ணிக்கை 21,000 தாண்டியது! ஊரடங்கைத் தளர்த்துவது ஆபத்து – போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான, ரிஷி சுனக், இதுவரை இல்லாத அளவிற்கு, சிறிய, பெரிய தொழில் நிறுவனங்களுக்கான ஊக்கச் சலுகை திட்டங்களை, பார்லி.,யில் அறிவித்துள்ளார். இதில், முதற்கட்டமாக, 31.35 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரசு உத்தரவாத கடன்களை அறிவித்துள்ளார். இத்தொகை, ஒரு நிறுவனத்திற்கு தேவைப்படும், வாடகை, ஊதியம், மூலப் பொருட்கள் கொள்முதல், பங்கு முதலீடு உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வழங்கப்படும்.

இத்துடன், நிறுவனங்கள், ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளும் திட்டத்தையும், ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இதன்படி, ஒரு நிறுவனம், அதன் சில ஊழியர்களுக்கோ அல்லது ஒட்டு மொத்த ஊழியர்களுக்கோ, மீண்டும் வேலை துவங்கும் வரை, விடுப்பு அளிக்கும்பட்சத்தில், அவர்களின் 80 சதவீத ஊதியத்தை, அரசே வழங்கும். எனினும், இது மாதம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் ஊதியம் பெறுவோருக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு, 1.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால்,10 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோவது தடுக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன், சுய தொழில் செய்வோருக்கான வருவாய் ஆதார திட்டத்தின் கீழ்,’வாட்’ வரி தள்ளுபடி, வரி செலுத்த கூடுதல் அவகாசம் உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தாண்டு சில்லரை விற்பனை, ஓட்டல், சுற்றுலா ஓய்விடங்கள் ஆகிவற்றுக்கான வணிக வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏழு லட்சத்திற்கும் அதிகமான வர்த்தகர்கள் பயன்பெறுவர். இது தவிர, அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள நிறுவனங்கள், வலைதளங்களில் புதுமையான தொழில் செய்யும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உதவ, 4,750 கோடி ரூபாய் முதலீட்டில், வருங்கால நிதியம் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறிய நிறுவனங்களுக்கு, 24 லட்சம் ரூபாய் வரை, அரசின், 100 சதவீத உத்தரவாதத்துடன் கடன் வழங்கும் திட்டமும், பிரிட்டன் அரசின் பரிசீலனையில் உள்ளது.

ஐரோப்பாவைச் சேர்ந்த, இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும், பொருளாதார மீட்புக்கான ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளன.

கொரோனா – இங்கிலாந்தில் நர்சுகளாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் பலி

பிரான்ஸ், 20 தொழிலாளர்கள் வரை உள்ள நிறுவனங்களுக்கு, அவசர நிதி, 8.20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, தெரிவித்துள்ளது. ஜெர்மனி, பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக, 82 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், வரி தள்ளுபடி சலுகையும் அறிவித்துள்ளது. ஜெர்மனி, 5 ஊழியர்கள் வரை உள்ள தனியார் நிறுவனங்களுக்கு, மாதம், 7.38 லட்சம் ரூபாய் வீதம், மூன்று மாதங்களுக்கு வழங்குகிறது. இது, 10 ஊழியர்கள் உள்ள நிறுவனங்களுக்கு, 12.30 லட்சம் ரூபாய் என்ற அளவில் வழங்கப்படுகிறது.

இதேபோல, 27 நாடுகள் இணைந்த, ஐரோப்பிய கூட்டமைப்பும், மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்கி வருகின்றன. அடுத்த, ஏழு ஆண்டுகளில் செயல்படுத்த உள்ள இத்திட்டத்திற்கு, 125 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் என, தெரிகிறது.