கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவாத இரவு 10 மணி ஊரடங்கு, 6 பேர் விதி!

scotland , PUB, பப், கொரோனா
(Image: theguardian.com / Jonathan Brady)

இரவு 10 மணிக்கு பார், பப் உள்ளிட்டவற்றை மூட, ஆறு பேர் ரூல் உள்ளிட்ட விதிமுறைகள் கொரோனா பரவலைத் தடுக்க எந்த வகையிலும் உதவவில்லை என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

கொரோனா 2ம் கட்ட பரவலுக்கு ஹாஸ்பெட்டாலிட்டி துறையில் மக்களின் கவனக் குறைவு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி ஆறு பேர் விதி முறை அறிமுகம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து 3ம் நிலை கட்டுப்பாடு உள்ள பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் செயல்படும் பார், பப் உள்ளிட்டவை இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரசின் உத்தரவை மதித்து பார், பப்கள் இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன. ஆனாலும் பொது மக்கள் கலைந்து செல்லாமல் சாலையில் மது அருந்தி கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பின்னர் கூட்டம் கூட்டமாக பொது போக்குவரத்தை பயன்படுத்தி வீடு திரும்புகின்றனர்.

வீடுகளுக்கு வெளியே உணவகங்களில் வெவ்வேறு குடும்பங்களைச் சார்ந்த ஆறு பேர் வரை ஒன்று கூட ஆறு பேர் விதி கொண்டு வரப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த புதிய புதிய விதிமுறைகள் எல்லாம் கொரோனா கட்டுப்பாட்டில் பலன் அளித்ததா என லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அன்ட் டிராபிக்கல் மெடிசன் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது பெரும்பாலானவர்கள் கட்டுப்பாடு வருவதற்கு முன்பு பார்த்த அதே எண்ணிக்கையிலான தொடர்புகளைத் தான் இப்போதும் பார்த்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவானவர்களே தொடர்புகளை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதே போல் இந்த விதிமுறைகள் அமலில் இருக்கும் போதே மான்செஸ்டர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலை நீடித்தால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் இங்கிலாந்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் அரசாங்கத்தின் விதிமுறைகளால் கொரோனா குறைந்தது என்பதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே விதிமுறைகளை மீற மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று செய்தி வெளியான நிலையில், கட்டுப்பாடால் பலனில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter