இங்கிலாந்தில் சிறந்த உயர்க் கல்விக்கு கிடைக்கும் ஊக்கத் தொகை – முழு விவரம் இங்கே

வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள், உயர்தர கல்வியைப் பெறுவது மட்டுமல்லாமல், புதிய அனுபவம்,மொழி, கலாச்சாரம், சவால்களை சந்திக்கின்றனர். இந்த வகையான சர்வதேச வெளிப்பாடு உலகளாவிய தலைவராக வளர அவர்களுக்கு உதவுகிறது. சத்யா நாதெல்லா, இந்திர நூயி, சுந்தர் பிச்சை ஆகியோர் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் உயரக் கல்வி பெற்றவர்களே.

இருப்பினும், இந்தியாவில் பல திறமையான மாணவர்கள் வெளிநாடுகளில் ஏற்படும் அன்றாட செலவு மற்றும் கல்விக் கட்டணத்தை நிர்வகிப்பது கடினம் என்று கருதி வருகின்றனர். இதனால் நிதிச்சுமையை பெருமளவில் குறைக்கும் கல்வி ஊக்கத் தொகை குறித்த தகவல்கள் அவர்களுக்கு ஒரு வரமாக இருக்கும் என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் பிரிட்டனில் நீங்கள் பெறக்கூடிய சிறந்த உயர்கல்வி வாய்ப்பு குறித்த தகவல் இங்கே,

இங்கிலாந்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிந்தைய படிப்பு வேலை விசா அறிவிப்பு சர்வதேச மாணவர்களுக்கு கூடுதல் நன்மையாக இருக்கிறது. இதன் மூலம் படிப்பை முடித்து  விட்டு, 2 வருடங்கள் இங்கிலாந்தில் தங்கி வேலை வாய்ப்புகளைத் தேட இதன் மூலம் அனுமதி கிடைக்கின்றது.

இங்கிலாந்தில் படிக்க சிறந்த உதவித்தொகை பட்டியல் இங்கே முடிவதில்லை. கேட்ஸ் கேம்பிரிட்ஜ் உதவித்தொகை மற்றும் ரோட்ஸ் உதவித்தொகை போன்ற பல்வேறு பல்கலைக்கழக-குறிப்பிட்ட உதவித்தொகைகளும் முறையே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்ற நாட்டின் உயர்க் கல்வி நிறுவனங்கள் முறையே  கேட்ஸ் கேம்பிரிட்ஜ் உதவித்தொகை மற்றும் ரோட்ஸ் உதவித்தொகையை வழங்குகின்றன.

மேலும்,மாணவர்கள் EURAXESS UK  என்ற திட்டத்தின் மூலம் பிஎச்டி மற்றும் ஆராய்ச்சி நிலை படிப்பிற்கான ஏராளமான உதவித்தொகை வாய்ப்புகளையும் பெறமுடியும்.