பள்ளி மாணவன் மர்மக் கொலை – 14 வயது சிறுவன் உள்பட இருவர் கைது!

Schoolboy found dead, கொலை

லிங்கன்ஷையரில் மேல் நிலைப் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 14 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் என இரண்டு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

லிங்கன்ஷையரில் உள்ள ஃபிஷ்டாஃப்டில் ஒரு இடத்தில் இளைஞர் ஒருவர் இறந்துகிடப்பதாக நேற்று (சனிக்கிழமை) காலை 10.22 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த இளைஞருக்கு 30 வயது இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் இறந்து கிடந்தது இளைஞர் இல்லை, மேல்நிலைப் பள்ளி மாணவன் என்பது தெரியவந்துள்ளது.

மாணவர் கொலை தொடர்பாக 14 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் என இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் விடுவிக்கப்படவில்லை. தொடர்ந்து காவலில் உள்ளனர்.

இதைப் படிச்சீங்களா: கிறிஸ்துமஸ் கொரோனா அபாயம் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! – என்.ஹெச்.எஸ் ப்ரொவைடர்ஸ்

மேலும் அந்த பகுதியில் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 11) இரவு எட்டு மணி முதல் சனிக் கிழமை (டிசம்பர் 12) காலை 10.22 மணி வரையிலான சிசிடிவி காட்சிகள் வைத்திருந்தால் அதை போலீசுக்கு வழங்கி உதவும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஃப்ரீஸ்டன் சாலை மற்றும் வூட்தோர்ப் அவென்யூ, மற்றும் விங் டிரைவ், அல்கார்ன் க்ரீன் பகுதிகளில் உள்ள சிசிடிவி காமரா காட்சிகள் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவன் யார், எந்த பகுதியைச் சார்ந்தவர் என்பது உள்ளிட்ட எந்த ஒரு தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.

இந்த கொலை பற்றி தெரிந்தவர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறுவதைத் தடுக்க முடியும் என்று போலீஸ் அதிகாரி டிடெக்டிவ் சூப்பரிண்டெண்ட் மார்ட்டின் பார்க்கர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter