ஈழத் தமிழர்களுக்கு நாங்கள் உதவலயா? – லண்டனில் இருந்து ஆதாரம் வெளியிட்ட செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி

Senthil Ganesh
Senthil Ganesh

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, மேடையில் பாடுவது தான் இவர்களது சிறப்பு அம்சம். இரண்டு பேரும் வெவ்வேறு அணிகளில் பாடி தங்களது திறமையை நிரூபித்து வந்தனர்.

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…

சூப்பர் சிங்கர் 6வது சீசனில் நாட்டுப்புறப் பின்னணியில் பாடல்களை பாடி மக்களைக் கவர்ந்தவர்கள் செந்தில் – ராஜலட்சுமி தம்பதி. இவர்களே பாடலை எழுதி, அதை பாடியும் வந்தனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அந்த சீசனை இவர்களுக்காவே நேயர்கள் அதிகம் பார்த்தனர்.

178 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் வெப்பமான புத்தாண்டு – வானிலை மையம்

இறுதியில், சூப்பர் சிங்கர் டைட்டிலை செந்தில் கணேஷ் தட்டிச் செல்ல, சூட்டோடு சூடாக ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ‘என்ன மச்சான்’ பாடலை இத்தம்பதி பாடினர். பாடலும் ஹிட்டாக, அடுத்தடுத்த இவர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், ‘கரிமுகன்’ எனும் படத்தில் ஹீரோவாகவும் செந்தில் கணேஷ் நடித்தார்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க – டெல்லி ஐஐடிக்கும் பிரிட்டன் அரசுக்கும் என்ன தொடர்பு? – இங்கிலாந்து ஆர்வம் காட்டாதது ஏன்?

இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்காக லண்டன் சென்றிருந்தனர்.

மனம் மகிழும் மண்ணிசை எனும் நிகழ்ச்சியில் இவர்கள் பாடிய கிராமிய பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர்கள் திரும்பிய போது, பேஸ்புக் பதிவில் அதுகுறித்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், இதுக்கு செலவு செய்வதற்கு பதில், ஈழத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவலாமே? என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள செந்தில் கணேஷன், ”

#லண்டன் #பயணத்தை #பதிவிட்டதில் #ஒரு #நபா் #கேட்டிருக்கிறாா்,

இதற்கு செலவளிப்பதற்கு ஈழத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவலாமே? என்று.

உங்களைப்போன்றோா்கள் தொிந்துகொள்ளட்டுமே என்பதற்காகத்தான் இந்தப்பதிவு…

கிடைத்த வருமானத்தில் ரூ.50,000/.ஐ (இந்தியன் ரூபாய்) #ஈழத்துப் #உள்ள #ஏழைப் #பிள்ளைகளின் #கல்விச்செலவிற்காக #ஈழத்துப் #போராளி #ஈழவன் எனும் #ஈசன் அவா்களிடம் #கொடுத்துவிட்டு #வந்த #தருணம்.

(இதுபோன்ற செய்திகளை பதிவிட விரும்புவது இல்லை, உங்களைப்போன்றோா்க்காகவே இந்தப்பதிவு)

என்று குறிப்பிட்டிருக்கிறார்.

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதி மாடர்ன் உடைகள் உடுத்தியதற்கே அவர்கள் அதிக கேலி, கிண்டல்களை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.