ஐ.எஸ்-ல் இணைந்த ஷமிமா பேகத்தை இங்கிலாந்துக்குள் அனுமதிப்பது ஆபத்தை உருவாக்கும்! – அரசு வாதம்

Shamima security risk, ஷமிமா

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதால் இங்கிலாந்து குடியுரிமையை இழந்த ஷமிமா பேகத்தை மீண்டும் இங்கிலாந்தில் அனுமதிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லண்டனில் உள்ள பள்ளியில் பயின்று வந்த ஷமிமா பேகம் கடந்த 2015ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைவதற்காக நாட்டைவிட்டு வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து அவரது இங்கிலாந்து குடியுரிமை பறிக்கப்பட்டது. தற்போது பயங்கரவாத இயக்கம் ஒடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அகதிகள் முகாமில் உள்ளார்.

மீண்டும் இங்கிலாந்துக்கு வரத் தன்னை அனுமதிக்க வேண்டும், தன்னுடைய பறிக்கப்பட்ட குடியுரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்று அவர் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

குடியுரிமை பறிக்கப்பட்ட வழக்கை எதிர்கொள்ள அவரை இங்கிலாந்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஷமிமா பேகத்தின் வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்.

இதைப் படிச்சீங்களா: டிசம்பர் 2யுடன் முழு ஊரடங்கு முடிகிறது… ஜிம், அனைத்து கடைகளும் திறக்கலாம்! – பிரதமர் அறிவிப்பு

ஆனால் இதற்கு உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஷமிமா பேகம் என ஒருவரை அனுமதித்தால் இதை முன்னுதாரணமாகக் கொண்டு ஏராளமானவர்கள் இங்கிலாந்து திரும்புவார்கள்.

அவர்கள் நாடு திரும்புவது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துவிடும். எனவே, ஷமிமா பேகத்தை இங்கிலாந்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்று உள்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டது.

ஷமிமா பேகம் தற்போது அரசாங்கத்திடம் மன்னிப்பை வேண்டுகிறார். ஆனால், 2019ல் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிக்குப் பிறகு அவர் அச்சுறுத்தலாக இருப்பார் என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது பொது மக்களுக்கு மிகவும் கடுமையான வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும்.

ஷமிமாவின் வழக்கறிஞர் குடிமக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் முக்கிய கடமை என்றார். ஆனால் அந்த நோக்கம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

இப்போது அவரை அனுமதித்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார்.

வழக்கு விசாரணை மேலும் சில நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நீதிமன்றம் தீர்ப்புக்கான தேதியை அறிவிக்கும்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter