10 மணிக்கு மூடப்பட்ட பப்… தெருவில் திரண்ட ஆயிரக் கணக்கான இளைஞர்களால் குழப்பம்!

பப் மூடப்பட்ட பிறகும் தெருக்களில் திரண்டிருந்த மக்கள்! (Image: PA:Press Association)

லண்டன், செப்டம்பர் 27, 2020: கொரோனா பாதிப்பு காரணமாக இரவு 10 மணிக்கு பப் மற்றும் உணவகங்கள் மூட உத்தரவிடப்பட்டதால் இளைஞர்கள் துளியும் பொறுப்புணர்வின்றி தெருக்களில் கூடி ஆட்டம் போட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 2ம் கட்ட கொரோனா பரவல் வாய்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடு முழக்க ஒன்றன் பின் ஒன்றாக பல பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகிக் கொண்டே வருகின்றன.

தொடர்ந்து கொரோனாத் தொற்று அதிகரித்தால் முழு ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நாட்டு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கூறி வருகிறது. ஆனால், 10 மணிக்கு பப்கள் மூடப்பட்டதால் தெருக்களில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடினர்.

சமூக இடைவெளி, மாஸ்க் என எந்த ஒரு கொரோனா முன்னெச்சரிக்கையும் இன்றி அவர்கள் தெருக்களில் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரவு 10 மணிக்குப் பிறகு ரெஸ்டாரண்ட்கள், பப்கள் மூடப்பட்டன. அங்கிருந்து அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அப்படி வெளியே வந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல், தெருக்களிலேயே அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.

மத்திய லண்டன், லீட்ஸ், நியூகேஸில், பிரிஸ்டல் என பல இடங்களில் சனிக்கிழமை இரவு இளைஞர்களின் செயல்பாடு காரணமாக கேலிக்கூத்தாகவே கடந்தது.

பல உணவகங்கள், பப்கள் இரவு 11 மணி வரையிலும் திறந்து வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு மது விற்பனை செய்தன. இளைஞர்கள் தெருக்களிலேயே அவற்றை குடித்து மகிழ்ந்தனர்.

ஊரடங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

பலரும் தங்கள் வீடுகளுக்குச் செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

உபேர் கால் டாக்சி கட்டணம் 2.6 மடங்கு அதிகரித்தது. அப்படி இருந்தும் பலருக்கும் வண்டி கிடைக்கவில்லை.

இதனால் பொது போக்குவரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதுவும் கூட வைரஸ் தொற்றுக்கு காரணமாகிவிடலாம் என்று நேரில் பார்த்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இனி வரும் நாட்களில் இது போன்ற நடவடிக்கையில் இறங்க வேண்டாம். இறுதி நேரத்தில் ஏராளமானோர் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும்படி லண்டன் மேயர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter