கொழும்பு – லண்டன் பயணப்பாதை மாற்றம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

UK News in Tamil: கொழும்பில் இருந்து லண்டன் பயணிக்கும் விமானத்தின் பயணப்பாதையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாற்றியுள்ளது.

ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கவனத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலகும் இளவரசர் ஹாரி, மேகன்

ஈரான் மற்றும் ஈராக்கின் வான் வழியை தவிர்த்து வேறு வழியில் பயணிக்க முடிவு செய்திருப்பதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் கூறியுள்ளது.

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான அதிகாரிகளுடன் கலந்துரையாடி பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இலங்கை விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில், ஈரானிய புரட்சிகர காவல்படைத் தளபதி ஜென்ரல் காஸ்ஸெம் சுலைமானி மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. காஸ்ஸெம் சுலைமானி அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளின் கொடிய எதிரியாகக் கருதப்பட்டார்.

ஈரானில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவரான சுலைமானி, மத்திய கிழக்கில் மிகவும் சக்திவாய்ந்த ஜெனரலாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஐக்கிய அரபு அமீரகம் செல்கையில் இவற்றை கட்டாயம் தவிருங்கள்’ – பிரிட்டன் எச்சரிக்கை