இங்கிலாந்தை நெருங்கும் சூறாவளி… மக்களுக்கு எச்சரிக்கை!

Rain, மழை
(Image: Getty)

இங்கிலாந்தில் கொரோனா, கொடும் வெயிலைத் தொடர்ந்து சூறாவளிக் காற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் குறிப்பாக வடக்கு, வட மேற்கு இங்கிலாந்தில் வருகிற வியாழக்கிழமை காலை முதல் அதிபயங்கர காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்று வீசலாம். இதன் அறிகுறியாக நாளை (புதன்கிழமை) பிற்பகலிலிருந்து காற்றின் வேகம் அதிகரிக்கும்.

வடக்கு, வடகிழக்கு இங்கிலாந்தில் காற்று அதிதீவிரமாக வீசும்போது இங்கிலாந்தின் மற்றப் பகுதிகளில் அதாவது இங்கலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் பகுதியில் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும். வெள்ளிக்கிழமை புயல் காற்று இங்கிலாந்தின் மேற்கு பகுதியை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் வியாழக்கிழமை கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பகுதியில் இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தூரல் மழையும் சனிக்கிழமை கன மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய அளவு மழை ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் என்பதால் மக்கள் ஜாக்கிரதையுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து வானிலை ஆய்வாளர் அலெக்ஸ் டெக்கின் கூறுகையில், “வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொரு வானிலை ஆய்வாளர் கிரஹாம் கூறுகையில், “கெய்ல் புயல் வெப்பமண்டல புயல் ஆகும்.  அதிகபட்சமாக மணிக்கு 70 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும். இது ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்டிருப்பது இயல்புக்கு மாறானதாகும்.

இந்த புயல் பாதிப்பு காரணமாக மிகப்பெரிய அளவில் மழையை எதிர்பார்க்கலாம். சில பகுதிகள் 20-25 மி.மீ மழையையும் சில பகுதிகள் 50 மி.மீ வரையிலான மழையையும் பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்படலாம், சாலைகள் அடைக்கப்படலாம், போக்குவரத்து தடை காரணமாக தாமதம் மற்றும் நெரிசல் ஏற்படலாம்” என்றார்.

இந்த புயல் மழை காரணமாக மின்சார விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனத்துடன் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk