பரிசோதனைகள், நோயாளிகளை கண்டறிவதை மேம்படுத்த வேண்டும்! – போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

(Image: bbc.com/PA)

கொரோனா பரிசோதனைகள் மற்றும் கொரோனா நோயாளிகள் கண்டறிதலை தேசிய சுகாதார சேவைகள் மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சன், தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ், நிதி அதிபர் ரிஷி சுனக் ஆகியோர் புதன்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“மக்களின் ஏமாற்றங்களை நான் நன்கு புரிந்துகொள்கிறேன். ஏன் விரைவான பரிசோதனை வேண்டும், அதை ஏன் மேம்படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொள்கிறேன்.

கொரோனா பாசிடிவ் உறுதியாகும் நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமானது.

சர் பேட்ரிக் வாலன்ஸ் சோதனைத் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். அதனுடன் விரைவாக பரிசோதனை மேற்கொள்வது மற்றும் கொரோனா தொடர்புடையவர்களை விரைவாக அடையாளப்படுத்திக் கண்டறிவதில் கவனம் செலுத்துவதும் முக்கியம்.

அவர்களை முடிந்த வரை விரைவாக தனிமைப்படுத்த வேண்டியது அவசியம். இந்த அனைத்து செயல்பாடுகளையும் 48 மணி நேரத்துக்குள்ளாக முடிக்க வேண்டும்.

ஐரோப்பாவில் வேறு எந்த ஒரு நாட்டையும் விட அதிக அளவில் இங்கிலாந்தில் சோதனைகள் செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு 5 லட்சம் சோதனைகளை எட்டுவது நிச்சயம். மேலும் தொழில்நுட்பங்களும் மேம்பட்டு வருகின்றன.

வைரஸ் பரவுவதைத் தடுக்க முழு தேசிய அளவிலான ஊரடங்கை கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். ஆனால், நாங்கள் அதைச் செய்ய முடியாது.

நாட்டில் செய்யப்பட்ட 12 பில்லியன் பரிசோதனைகள் மற்றும் தொற்று பரவல் வாய்ப்புள்ளவர்களை கண்டறிதல் நடவடிக்கைகள் குறிப்பிடத்தகுந்த பலனை அளித்துள்ளன” என்றார்.

சர் பேட்ரிக் வாலன்ஸ் பேசுகையில், “தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று யூகிக்க விரும்பவில்லை. நோய்த் தடுப்பு, தடுப்பூசி உள்ளிட்ட விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி பணிகள் மூன்றாம் கட்டத்தில் உள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் அவை கிடைத்துவிடும் என்று சில விவரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு வசந்த காலத்தின் போதுதான் அனைவருக்கும் அது கிடைக்கும் என்று நான் கருதுகிறேன்.

இந்த ஆண்டு கிறிஸ்துமசுக்கு முன்பாக தடுப்பூசி கிடைத்துவிடலாம். இருப்பினும் அனைவருக்கும் அது அடுத்த ஆண்டு வசந்த காலத்துக்கு முன்பாகவே கிடைக்கும். அதுவே நம்முடைய இலக்காகவும் உள்ளது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter