முதன் முறையாக 60 ஆயிரத்தைக் கடந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை!

daily confirmed cases, கொரோனா
(Image: news.sky.com)

இங்கிலாந்தில் முதன் முறையாக ஒரு நாளின் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா உச்சத்தில் இருந்தது. அப்போது கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்மை, பரிசோதனை முறைகளில் இருந்த பற்றாக்குறை காரணமாக அதிக நோயாளிகள் கண்டறியப்பட்டார்கள் என்று கூறப்பட்டது.

அதன் பிறகு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துகொண்டே வந்தது. தினசரி புரிய நோயாளிகள் எண்ணிக்கை சில நூறு என்ற அளவில் அது குறைந்தது.

இந்த நிலையில் புதிய வீரியம் மிக்க கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்தில் மீண்டும் தினம் தினம் புதிய உச்சத்தை கொரோனா ஏற்படுத்தி வருகிறது.

இன்று (ஜனவரி 5) அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில் 60,916 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டு 28 நாளில் இறந்தவர்கள் எண்ணிக்கை இன்று 830 ஆக அதிகரித்துள்ளது.

டிசம்பர் 29ம் தேதியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்தது. அதில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா உச்சத்தில் இருந்த போது தினசரி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7000ஐ தாண்டவில்லை.  தற்போது அது 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதைப் படிச்சீங்களா: ரீடிங்கில் 13 வயது சிறுவன் கொலை… சிறுமி உள்பட ஐந்து பேர் கைது!

இதன் மூலம் இங்கிலாந்தின் இதுவரையிலான மொத்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, 27 லட்சத்து 74 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76,305 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது என்.ஹெச்.எஸ் மீதான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடும். எனவே, பொது மக்கள் ஒவ்வொருவரும் வீட்டைவிட்டு வெளியே செல்வதைத் தடுக்க வேண்டும்.

வீட்டுக்குள்ளேயே இருப்பதன் மூலமாக கொரோனா பரவல் தடுக்கப்படும். எவ்வளவு தீவிரமாக கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கிறோமோ அந்த அளவுக்கு உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவ, தொற்று நோயியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் கேட்க வேண்டுமே!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter