கொரோனா ஊரடங்குக்குப் பிறகு வர உள்ள கட்டுப்பாடுகள் தளர்வுகள் என்ன? – வெளியான புது தகவல்

proposed rules announce, கொரோனா, ஊரடங்கு
(Image: instinctif.com)

டிசம்பர் 2ம் தேதி கொரோனா ஊரடங்கு முடிவடையும் நிலையில் அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அமலாக உள்ள கட்டுப்பாடுகள், தளர்வுகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருகிற டிசம்பர் 2ம் தேதி கொரோனா முழு ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து மீண்டும் மூன்றடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடு அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் நாளை அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கு கொரோனா குளிர்காலத் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகு அமலுக்கு வர உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன என முன்னணி ஊடகங்கள் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி,

தற்போது பப், ரெஸ்டாரண்ட்களில் உணவு டேக் அவே மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. அதுவும் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது.

இரவு 11 மணி வரை பப் மற்றும் ரெஸ்டாரண்ட்கள் திறந்து வைக்கவும், உணவு விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் உணவு சேவைத் துறையில் முன்னேற்றம் காணும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டயர் 2 மற்றும் 3 அதாவது தீவிர, மிக மோசமான பாதிப்பு உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் ஈஸ்டர் வரையில் தங்கள் உறவினர்கள், நண்பர்களின் குடும்பங்களை அவர்கள் இல்லம் சென்று சந்திக்க தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

ஒரே வாரத்தில் இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்தால் அவர்களுக்கு ஃப்ரீடம் பாஸ் வழங்கப்படும்.

டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகு ஜிம், பியூட்டி பார்லர், சலூன் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்படும்.

மிகத் தீவிர கட்டுப்பாடு உள்ள பகுதிகளிலும் கூட அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

புதிய கொரோனா விதிமுறைகள் கிறிஸ்துமஸ் நேரத்தில் ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.

ஃப்ரீடம் பாஸ் வாங்கியவர்கள் சாலையில் மாஸ்க் இல்லாமல் சென்று வரக் கூட அனுமதிக்கப்படுவார்களாம். யாராவது ஏன் மாஸ்க் அணியவில்லை என்று கேட்டால் தனக்கு வழங்கப்பட்ட ஃப்ரீடம் பாசைக் காட்டினால் போதும் என்று கூறப்படுகிறது.

இந்த ஃப்ரீடம் பாஸ் புத்தாண்டு தருணத்தில் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter

Related posts

இன்று வெளியாகிறது முழு ஊரடங்கு அறிவிப்பு? – அமைச்சரவையுடன் அவசர ஆலோசனையில் பிரதமர்!

Editor

கில்லர் புயல் உயிரிழப்பு கணக்கைத் தொடங்கியது… ராட்சத அலை இழுத்துச் சென்றதில் ஒருவர் பலி!

Editor

ஸ்காட்டிஷ் விலங்கியல் பூங்காவில் தீவிபத்து! – விலங்குகள் தப்பின

Editor