பிரிட்டனின் தாமஸ் குக் ட்ராவல்ஸ் வீழ்ச்சி : இந்தியாவுக்கு பாதிப்பா?

இந்தியாவுக்கான ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பிரிட்டனின் தாமஸ் குக் நிறுவனத்தின் வீழ்ச்சி நிச்சயம் பிரதிபலிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் ட்ராவல்ஸ் நிறுவன ஜாம்பவான் ஆன ‘தாமஸ் குக்’ நிறுவனம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில்,பெரும் நஷ்டத்தால் மூடப்பட்ட தாமஸ் குக் நிறுவன வீழ்ச்சியின் தாக்கம் இந்திய சுற்றுலாத்துறையைப் பெரிதும் பாதித்துள்ளது. எனவே தாமஸ் குக் வீழ்ச்சியின் தாக்கம் அடுத்த சில மாதங்களுக்கும் இருக்கும் என கருதப்படுகின்றது.

இந்தியா இ-காமர்ஸ் துறையைத் தவறாகப் புரிந்துள்ளது: இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில்

பிரிட்டன் ட்ராவல்ஸ் நிறுவனமான தாமஸ் குக் மூலம் பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த அதிக சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருவது வழக்கம். இந்த வெளிநாட்டு சுற்றுலா விரும்பிகளுக்கு இந்தியா என்றால் தாமஸ் குக் ட்ராவல்ஸ் தான் என்றிருந்த நிலையில் நிச்சயம் இந்தியாவுக்கான சுற்றுலா வருவாய் குறையும் என்கின்றனர் உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள் மூலம் இந்தியாவிற்கு கிடைத்த வருவாய் 8.01 சதவிகிதம் ஆகும். ஐரோப்பிய ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகளால் அதிக வருவாய் இந்தியாவிற்கு கிடைக்கின்றது. 2018 ஆகஸ்ட் மாதத்தைவிட 2019 ஆகஸ்ட் மாதத்தில் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.6 சதவிகிதமாக அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தாமஸ் குக் வீழ்ச்சியால் இந்தியாவுக்கான ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் எனக் கூறப்படுகின்றது.

இங்கிலாந்தின் Maidenhead நகரில் லண்டன் வாழ் தமிழர்கள் பொங்கல் கொண்டாட்டம்