மூன்று வித கட்டுப்பாடுகள்… திங்கட்கிழமை அறிவிக்கும் போரிஸ் ஜான்சன்!

போரிஸ் ஜான்சன் (Image: Aaron Chown/PA via AP)

லண்டன், அக்டோபர் 10, 2020: நாடு முழுக்க மூன்று விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளை திங்கட்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுக்க கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில், அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வருகிற திங்கட்கிழமை இது தொடர்பான புதிய அறிவிப்பை பிரதமர் வெளியிட உள்ளார்.

உள்ளூர் கோவிட் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய தரத்திலான அணுகுமுறையை போரிஸ் ஜான்சன் வெளியிட உள்ளார்.

மோசமான பாதிப்பு உள்ள பகுதிகளில் முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று தெரிகிறது. இங்கு பப், பார்கள் மூடப்படும் என்று கூறப்படுகிறது.

ஒரு லட்சம் மக்களுக்கு 100க்கும் குறைவான தொற்று உள்ள பகுதிகளில் சமூக இடைவெளி, ஆறு பேர் விதி மற்றும் இரவு 10 மணி ஊரடங்கு ஆகியவை அமலாகும்.

ஒரு லட்சத்துக்கு 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருப்பின் அங்கு மேற்கண்ட விதிமுறைகளுடன் வேறு குடும்பத்தைச் சார்ந்தவர்களை அவர்கள் இல்லத்துக்குள்ளோ, வெளியேயோ அல்லது உணவகம் போன்ற பிற இடங்களிலே சந்தித்து உரையாடத் தடை விதிக்கப்படும்.

நாட்டின் சராசரி தொற்று விகிதத்தை விட அதிகமாக உள்ள பகுதிகளில் லெவல் 1 மற்றும் லெவல் 2 கட்டுப்பாடுகளுடன், அத்தியாவசியமற்ற தொழில் நிறுவனங்கள் மூட உத்தரவிடப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பள்ளிகள், அலுவலகங்கள் திறந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமை ஸ்டாட்டர்ஜி ஆலோசகர் சர் எட்வர்ட் லிஸ்டர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “அதிகரித்து வரும் தொற்றை எதிர்கொள்ள உள்ளுர் பகுதிகளில் மேலும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வது சாத்தியமே” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter

Related posts

10 மணிக்கு மூடப்பட்ட பப்… தெருவில் திரண்ட ஆயிரக் கணக்கான இளைஞர்களால் குழப்பம்!

Editor

கனடா போன்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

Web Desk

300 ஆண்டுகளில் இல்லாத மோசமான மந்தநிலையை பிரிட்டன் சந்திக்கும் – ரிஷி சுனக் எச்சரிக்கை

Web Desk