அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா – 60 லட்சம் மக்கள் மீது மிகக் கடும் கட்டுப்பாடு அமல் ஆனது

Deaths Levels UK, கொரோனா
(Image: Carl Recine/Reuters)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  இங்கிலாந்தில் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீது மிகக் கடும் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.

இங்கிலாந்தில் குறைவது போல போக்கு காட்டிய கொரோனா கிறிஸ்துமஸ் சமயத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் மீண்டும் முழு ஊரடங்கு நிலையான நான்காம் நிலை ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் இங்கிலாந்தின் பெரும் பகுதிகள் செல்வதாக அறிவிக்கப்பட்டது.

கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள் காலை முதல் மேலும் பல பகுதிகள் நான்காம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல் வடக்கு அயர்லாந்தில் ஆறு வார முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்த நிலையில், இன்று காலை 00.01 முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர்த்து மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.

எடின்பர்க் பல்கலைக் கழக சர்வதேச பொது சுகாதார பிரிவு தலைவர் பேராசிரியர் தேவி ஶ்ரீதர் இது குறித்து கூறுகையில், “தற்போதைய சூழலில் விரைவில் இங்கிலாந்து முழுவதும் நான்காம் நிலை கட்டுப்பாடு அமல் ஆகும் சூழல் வரும்.

அந்த நிலையை நோக்கியே நாடு சென்று கொண்டிருக்ககிறது. மக்கள் மிக நேர்மையாகக அடுத்த சில வாரங்கள் நாம் எப்படி இருக்க வேண்டும்; என்ப முடிவு செய்து அதன்படி  நடப்பது நல்லது” என்றார்.

இதைப் படிச்சீங்களா: பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடு – அமெரிக்க அரசு

செசக்ஸ், ஆக்ஸ்ஃபோர்டுஷையர், சஃபோக், நார்ஃபோக், கேம்பரிட்ஜ்ஷையர், எசெக்ஸ்,  வேவர்லி, ஹாம்ப்ஷையர் . நியூஃபாரஸ்ட் ஆகியவை நான்காம் நிலைக்கு தற்போது  வந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.-

இதற்கிடையே புதிய மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் காரணமாக மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படலாம் என்று  நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவும் என்பதால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

2020ல் ஏற்பட்டதைவிட 2021ல் ஏற்படப் போகும் கொரோனா உயிரிழப்பு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter