கொரோனா கடினமான கட்டுப்பாடு நிலைக்கு செல்லும் தெற்கு இங்கிலாந்து!

NHS coronavirus vaccine, கொரோனா
(Image: PA Wire)

கொரோனா தொற்று காரணமாக தென் கிழக்கு இங்கிலாந்து பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் வருகிற சனிக்கிழமை முதல் செல்கின்றன என்று சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென் கிழக்கில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் வருகிற சனிக்கிழமை முதல் மிகக் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டுக்குள் செல்ல உள்ளனர்.

பெட்ஃபோர்ட்ஷையர், பக்கிங்ஹாம்ஷையர், பெர்க்க்‌ஷையர், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் ஆகியவை மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் செல்கின்றன.

அதே போல் சர்ரே, ஈஸ்ட் சசெக்ஸ், கேம்பிரிட்ஷையர் மற்றும் ஹாம்ப்ஷையர் ஆகியவையும் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் செல்கின்றன.

ஏற்கனவே மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஸ்வாட் பகுதியில் அதே நிலை நீடிக்கும் என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிரிஸ்டல் மற்றும் சமர்செட் பகுதிகள் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டில் இருந்து இரண்டாம் நிலை கட்டுப்பாட்டுக்குள் செல்கின்றன. அனைத்து மாற்றங்களும் சனிக்கிழமை நள்ளிரவு 00.01 மணி முதல் அமலுக்கு வரும் என்றார்.

மெட் ஹென்காக்கின் இந்த அறிவிப்பின் மூலம் இங்கிலாந்து மக்கள் தொகையில் 68 சதவிகிதம் பேர் அதாவது 38 மில்லியன் மக்கள் மூன்றாம் நிலை ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றனர்.

30 சதவிகித மக்கள் இரண்டாம் நிலை கட்டுப்பாட்டின் கீழும், வெறும் 2 சதவிகித மக்கள் மட்டுமே முதல் நிலை கட்டுப்பாட்டின் கீழும் இருப்பார்கள்.

இது குறித்து தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறுகையில், “தற்போது உள்ள கொரோனா கட்டுப்பாடு நிலைகள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இல்லை.

இதைப் படிச்சீங்களா: கொரோனா பரவலைத் தடுக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் குறைத்துக்கொள்ள கோரிக்கைவிடுத்த போரிஸ் ஜான்சன்!

கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் கொரோனா பரவல் எண்கள் தவறான திசையில் செல்வதை நாம் பார்த்து வருகிறோம்” என்று குற்றம் சாட்டினார்.

கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் அரசு தெளிவான முடிவெடுக்க வேண்டும்.

திடீரென்று மூன்றாம் நிலைக்கு செல்வதாக அறிவிப்பது, இரண்டு வாரங்கள் கழித்து இரண்டாம் நிலைக்கு மாற்றுவது, பிறகு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவிட்டது என்று கூறுவது என்று தொடர்ந்து தடுமாற்றம் நிலவுகிறது.

அரசு தெளிவான, தீர்க்கமான முடிவெடுத்தால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதே நிதர்சனம்!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter