வாழ்வா சாவா என்ற நிலையில் லண்டன்! – டவர் ஹேம்லெட்ஸ் மேயர் வேண்டுகோள்

(Image: EPA/WILL OLIVER)

லண்டன், அக்டோபர் 3, 2020: கொரோனா பரவல் காரணமாக வாழ்வா சாவா என்ற நிலையில் நிற்பதாகவும் மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கிழக்கு லண்டனில் உள்ள டவர் ஹேம்லெட்ஸின் மேயர் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக வேறு ஒரு குடும்பத்தினர் வேறு ஒரு குடும்பத்தினருடன் சந்திப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தடையை மீறி சந்திப்புகள், பார்டிகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

பப்புக்கு செல்ல தடை இல்லை என்பதை சாதகமாக பயன்படுத்தி அங்கு வைத்து சந்திப்புகள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன.

இதனால் கொரோனா பரவல் தடுக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.

இந்த நிலையில் மற்ற குடும்பத்தினரை சந்திக்க விதிக்கப்பட்ட தடையைக் கிழக்கு லண்டனில் உள்ள டவர் ஹேம்லெட்ஸ் மக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று அந்நகரத்தின் மேயர் ஜான் பிக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

லண்டன் மேயர் சித்திக் கான் மற்றும் கவுன்சில் நிர்வாகம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவலை வாழ்வா சாவா பிரச்னை என்று டவர் ஹேம்லெட் மேயர் வர்ணித்துள்ளார்.

இது தொடர்பாக டவர் ஹேம்லெட்ஸ் மக்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “டவர் ஹேம்லெட்டில் கடந்த வாரம் அதாவது செப்டம்பர் 28ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பேருக்கு 44 ஆக அதிகரித்துள்ளது.

இது அதற்கு முந்தைய பாரத்தில் 38.5 ஆக இருந்தது. கோடைக் காலம் முடியும் நேரத்தில் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போதைய சூழலை நாம் ஒப்புக் கொண்டு அதை எதிர்கொள்ள வேண்டும்.

லண்டனில் கொரோனாத் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் டவர் ஹேம்லெட்டும் ஒன்று. தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த, மக்களை பாதுகாக்க சில நடவடிக்கை எடுத்தாக வேண்டியுள்ளது.

நாடு முழுக்க தற்போது உள்ள கட்டுப்பாடுகள் என்பது மிகவும் குறைந்தபட்சமானது. நம்மைப் பாதுகாக்க இன்னும் இதைக் கடுமையாக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

அரசு மட்டுமின்றி, தனி நபர் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter