காற்று மாசுபாட்டால் 1,60,000 பேர் உயிரிழக்க வாய்ப்பு – பிரிட்டன் எச்சரிக்கை

சமீபத்தில் பிரிட்டிஷ் ஆய்வு நிறுவனமான பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் (British Heart Foundation) வெளியிட்ட ஆய்வறிக்கையில், அடுத்த பத்தாண்டுகளுக்குள் காற்று மாசுபாட்டால் 1,60,000 பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2030-க்குள் இதயக் கோளாறு, மாரடைப்பு, நுரையீரல் செயலிழப்பு மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதம் அதிகரிக்கும் என்று பிரிட்டனை எச்சரித்துள்ளது அந்த அமைப்பு.

பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும், பத்தில் நான்கு குழந்தைகளின் மரணத்துக்குக் காற்று மாசுபாடு காரணமாக இருக்கிறது.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் நிறைவேறிய பிரெக்சிட் – நிம்மதியடைந்த போரிஸ் ஜான்சன்

இப்போது ஆண்டுக்கு 11,000 பேர் மேற்கூறிய காரணங்களால் மரணிக்கின்றனர். இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ள ஆய்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து, காற்று மாசுபாடு குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளை பிரிட்டன் அரசு பின்பற்ற வேண்டுமென்று அந்த அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

“ஒவ்வொரு நாளும் நாடு முழுக்க லட்சக்கணக்கான மக்கள், நச்சுத்தன்மை வாய்ந்த மாசுபாட்டுக் காரணிகளைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவை, மக்களின் ரத்த நாளங்கள் வழியாக உடல் உறுப்புகளைப் பாதிக்கின்றன. காற்று மாசுபாடு சந்தேகமே இன்றி, மக்களுடைய ஆரோக்கியம் குறித்து ஓர் அவசர காலச் செயல்பாட்டை அரசு முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. இது மொத்த மக்கள் சமுதாயத்துக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்” என்று பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் அமைப்பின் செயல் இயக்குநர் ஜேக்கப் வெஸ்ட் கூறியுள்ளார்.

“பிரிட்டன் மக்கள்மீது காற்று மாசுபாடு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து நம் அனைவருக்குமே தெரியும். அதனால்தான், அரசாங்கம் காற்றின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுத்துக்கொண்டிருக்கிறது” என்று இந்த ஆய்வறிக்கை குறித்துப் பேசிய பிரிட்டன் சுற்றுச்சூழல் அமைச்சர் ரெபெக்கா போவ் கூறியுள்ளார்.

பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும், பத்தில் நான்கு குழந்தைகளின் மரணத்துக்குக் காற்று மாசுபாடுதான் காரணமாக இருக்கிறது. ஆண்டுக்கு 40,000 பேர் இதனால் இறக்கிறார்கள். வளர்ந்த நாடான பிரிட்டனிலேயே காற்று மாசுபாடு இவ்வளவு தீவிரமாக இருக்கும்போது, வளரும் நாடான இந்தியாவில் அதன் தீவிரத்தை இன்னமும் உணராமல் மெத்தனமாகச் செயல்படுவது அதைவிட மோசமான பிரச்னைகளைக் கொண்டுவரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஈரானில் பிரிட்டன் தூதர் கைது! உலக நாடுகள் கடும் கண்டனம்