லண்டனில் சிக்கிய 10 லட்சம் பவுண்ட் மதிப்பிலான கஞ்சா செடி!

கஞ்சா, போதைப் பொருள், class B drugs
(Image: Met Police)

லண்டனில் வளர்க்கப்பட்டு வந்த 10 லட்சம் பவுண்ட் மதிப்பிலான கஞ்சா செடியை லண்டன் போலீசார் கண்டறிந்து கைப்பற்றினர்.

லண்டனில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால் சமூக விரோத செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

போலீசார் போதை ஆசாமிகளைப் பிடித்தாலும், தொடர்ந்து போதைப் பொருட்கள் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு சிமெண்ட் பிளாக் உள்ளே ஹெராயின் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் லண்டனில் ஒரு வீட்டில் கஞ்சா சொடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து என்டபிள்யூ2 வடக்கு சர்க்குலர் ரோடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்கு போலீசார் விரைந்தனர்.

வீட்டுக்குள் நுழைந்து ஆய்வு செய்தபோது மாடிப் பகுதிக்கு செல்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்ததை போலீசார் கண்டனர். மோப்ப நாய்களும் அந்த பகுதியில் பிரச்னை இருப்பதைக் காட்டின.

எனவே, தடுப்பை அகற்றிவிட்டு மேலே சென்ற போது அங்கு அதிக அளவில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதை போலீசார் கண்டனர்.

அங்கு கைப்பற்றப்பட்ட கஞ்சா செடியின் மதிப்பு 10 லட்சம் பவுண்ட் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து மெட்ரோபாலிடன் போலீஸ் டாஸ்க்ஃபோர்ஸை சேர்ந்த தலைமை ஆய்வாளர் கிரேஸ் பிளாக் டர்னர் கூறுகையில், “ஏராளமான லாபத்தில் விற்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக இப்படி கஞ்சா செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

கஞ்சா செடி வளர்க்கப்படுவது பற்றி தகவல் தந்தவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

அவர்களின் கவலைக்கு போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் 10 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள பி கிளாஸ் போதை மருந்துகள் தற்போது வீதிகளுக்குச் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

வட மேற்கு பி.சி.யு கமாண்டர் லூயிஸ் ஸ்மித் கூறுகையில், “கஞ்சா செடிகளை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வதன் மூலம் கிரிமினல்கள் மற்றும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கஞ்சா தயாரிப்பு செய்து மக்களைக் கொல்கிறார்கள்.

கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் இது போன்ற கஞ்சா தோட்டங்களை தங்கள் பகுதியில் அமைக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்” என்றார்.

இங்கு கஞ்சா வளர்த்தவர்கள் மற்றும் அதை விற்பனை செய்தவர்களை போலீசார் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter

Related posts

இன்று வெளியாகிறது முழு ஊரடங்கு அறிவிப்பு? – அமைச்சரவையுடன் அவசர ஆலோசனையில் பிரதமர்!

Editor

பிரிட்டன் அரச குடும்பத்தில் வியக்க வைக்கும் தனி நபரின் வருமானம்

Web Desk

லண்டனில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து… ஒருவர் பலி – உயிருக்கு போராடும் பெண்!

Editor