இங்கிலாந்தில் ஒரே நாளில் 6178 பேருக்கு கொரோனா!

UK, Covid, Lockdown
(Image: Reuters)

லண்டன், செப்டம்பர் 23, 2020: UK Coronavirus cases புதிய உச்சத்தைத் தொடும் நிலையை அடைந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றியிருந்தால் இது போன்ற பாதிப்பு வந்திருக்காது.

இனியும் கடைப்பிடிக்காவிட்டால் முழு ஊரடங்கை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் செவ்வாய் கிழமையைக் காட்டிலும் இது 1252 அதிகம்.

இது தவிர கொரோனா வைரஸ் தொற்றுக்கு 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மே மாதம் 1ம் தேதி இங்கிலாந்தில் 6201 பேருக்குத் தொற்று ஏற்பட்டது உச்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் ஜூலை மாத தொடக்கத்தில் தொற்று குறைந்ததுமே பப் உள்ளிட்டவை திறக்கப்பட்டன.

மக்கள் சமூக இடைவெளி, முகமூடி அணிவது உள்ளிட்டவற்றைப் புறக்கணித்து ஒன்று கூடினர்.

அரசு விதிமுறைகளை மீறி பார்ட்டி, இசை நிகழ்ச்சிகளில் ஒன்று கூடி கொரோனாத் தொற்று பரவலுக்கு துணை புரிந்தனர்.

இதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இங்கிலாந்தில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. புதிய கட்டுப்பாடுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார்.

பப், உணவகங்கள் உள்ளிட்டவற்றை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும், குடும்பத்தினர் தவிர்த்து மற்றவர்களை சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது கொரோனா பரவலைத் தடுக்க உதவும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

முழு ஊரடங்கைத் தவிர்க்க அரசின் விதிகளைப் பின்பற்றுமாறு மக்களைப் பலரும் பணிவுடன் கெஞ்சிக் கேட்டு வருகின்றனர். இது குறித்து இங்கிலாந்தின் பொது சுகாதார மருத்துவ இயக்குநர் யுவோன் டாய்ஸ் கூறுகையில், “நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியம்” என்றார்.

முன்பு இருந்ததை போன்று முழு ஊரடங்கு இன்னும் வரவில்லை.., ஆனால் அதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பு மக்கள் கையில் மட்டுமே உள்ளது என்று பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள், நிபுணர்கள் கொரோனாத் திரும்ப கூறி வருகின்றனர். பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் 2ம் கட்ட பரவலைத் தடுத்து நிறுத்த முடியும்.

பிரதமரின் எச்சரிக்கை:

புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனும் கூட, ” உங்களின் இருமல் மற்றொருவரின் மரணக் குமிழாக மாறிவிட வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து மக்கள் ஒழுக்கம், தீர்வு மற்றும் ஒற்றுமையை  வெளிப்படுத்தி குளிர் காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். தவறும்பட்சத்தில் மீண்டும் முழு ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா உயிருக்கு அச்சுறுத்தல் என்பது உண்மையே… ஒருசிலர் செய்யும் தவறு ஒட்டுமொத்த மக்களின் கொரோனா பரவல் முயற்சியைச் சிதைத்துவிடுகிறது. மேலும் மேலும் கொரோனா பரவல் சிக்கலாவதைத் தவிர்க்க அரசின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது நல்லது. இல்லை என்றால் முழு ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயமாகிவிடும். முடிவு மக்கள் கையில்!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter