புதிய உச்சம் தொட்ட கொரோனா… 7243 பேருக்கு கோவிட் உறுதி!

(Image: global.chinadaily.com)

லண்டன், செப்டம்பர் 29, 2020: இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,143 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் நாட்டில் தற்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 42,072 ஆக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் ஜூலை மாதம் தொடக்கத்தில் கொரோனாத் தொற்று குறைவாக இருந்தது. இதன் பிறகு தளர்வுகள் பல வழங்கப்பட்டன.

அதன் பிறகு கொரோனா 2ம் கட்ட பரவல் மறைவாக நடந்து கொண்டிருந்தது. தற்போது கொரோனா நோயாளிகள் கண்டறிவதில் தினம் தினம் புதிய உச்சத்தை நாடு சந்தித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 7,143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

போன வாரம் தினசரி 4000ம் என்ற அளவில் இருந்த தொற்று நோயாளிகள் எண்ணிக்கை ஏழே நாளில் ஆறு ஆயிரம் என்ற நிலையை அடைந்தது. தற்போது அது ஏழாயிரத்தைத் தொட்டுள்ளது.

தற்போது அதிக அளவில் தொற்று நோயாளிகள் கண்டறியப்படுவது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மார்ச், ஏப்ரலில் கொரோனா உச்சத்திலிருந்த போது தொற்று நோயைக் கண்டறியும் வசதி குறைவாக இருந்தது. தற்போது அதிக அளவில் பரிசோதனை செய்யப்படுவதால் அதிக அளவில் நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். எனவே, முந்தைய நிலையோடு இதை ஒப்பிடுவது தவறானது என்கின்றனர்.

செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி இங்கிலாந்தில் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 4,46,256 ஆக அதிகரித்துள்ளது. 297 நோயாளிகள் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 57,900ஐ தொட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter