கொரோனாவுக்கு இன்று 67 பேர் பலி! – ஊரடங்குக்குப் பிறகு குறைவான எண்ணிக்கை பதிவு!

இங்கிலாந்தில் இன்று கொரோனாவுக்கு 67 பேர் பலியாகி உள்ளனர். ஊரடங்குக்குப் பிறகு மிகக் குறைந்த அளவில் தற்போதுதான் உயிரிழப்பு பதிவாகியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் பப், சலூன்கள், ரெஸ்டாரண்ட் உள்ளிட்டவை நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள நிலையில் இன்று கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 67 ஆக பதிவாகி உள்ளது. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்கு பிறகு இந்த சனிக்கிழமைதான் உயிரிழப்பு குறைவாக பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 624 பேருக்கு கொரோனா பாஸிடிவ் உறுதியாகி உள்ளது.

இன்று சனிக்கிழமை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்து மருத்துவமனைகளில் கொரோனா தொற்று காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா காரணமாக இங்கிலாந்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44,198 ஆக உயர்ந்துள்ளது. இந்த 39 பேர் இங்கிலாந்திலும், 5 பேர் ஸ்காட்லாந்திலும் இறந்துள்ளனர். கடந்த வாரம் சனிக்கிழமை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 84 ஆக இருந்தது.