புதிய சாதனை… ஒரே நாளில் 33,470 பேருக்கு கொரோனா – அதிர்ச்சித் தகவல்

Covid rules, கொரோனா, UK corona cases
நியூகேஸிலில் இரவு 10 மணிக்குப் பிறகு சாலையில் கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தும் போலீஸ் (Image: North News and Pictures)

பிரிட்டனில் ஒரே நாளில் 33,470 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதல் இதுவரையில் இதுவே புதிய உச்சம் எனத் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. புள்ளிவிவரங்கள் சற்று மிகப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், தொற்று இருப்பது உண்மைதான்.

ஆயிரம் கட்டுப்பாடுகள், ஊரடங்கு விதிக்கப்பட்டாலும் கொரோனா பரவல் மட்டும் குறையவில்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் இன்று வெளியான தகவல் அதிர்ச்சி ரகமாக அமைந்துள்ளது.

இது வரையிலான காலத்தில் புதிய உச்சமாக இன்று 33,470 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் இது வரை கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12.9  லட்சத்தை கடந்துள்ளது.

புதன் கிழமை 22,950 ஆக கொரோனாத் தொற்று பதிவானது. வியாழக்கிழமை (இன்று) அது 45.8 சதவிகிதம் அதிகரித்து 33,470 ஆக பதிவாகி உள்ளது.

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதே நோயாளிகள் அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.

நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடந்த புதன் கிழமை ஐரோப்பாவிலேயே பிரிட்டனில்தான் அதிகபட்சமாக 50 ஆயிரம் கொரோனா உயிரிழப்பை நிகழ்ந்துள்ளது.

லிவர்பூலில் மிக பிரம்மாண்டமான முறையில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதும், ஊரடங்குக்கு முன்பு அனைத்து பகுதிகளிலும் மிகப் பெரிய அளவில் சமூக கலப்பு இருந்ததும் தற்போது அதிக அளவில் தொற்று எண்ணிக்கை வெளிப்பட காரணம் என்று கூறப்படுகிறது

வரும் நாட்களில் இது எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே தாக்கம் எவ்வளவு என்பது தெரியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter