இந்தியா இ-காமர்ஸ் துறையைத் தவறாகப் புரிந்துள்ளது: இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில்

இந்தியா இ-காமர்ஸ் துறையை சரிவர இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முற்படவில்லை என்றும், இந்தியா வர்த்தக துறைகளில் புதிய முதலீடுகளை வரவேற்க தயாராக இருக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு எதிராக, இந்திய வர்த்தக அமைப்புகள் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றன. மேலும், இந்திய சில்லறை வர்த்தகர்களை அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ -காமர்ஸ் நிறுவனங்கள் முற்றிலும் அழித்துக் கொண்டு இருப்பதாகவும் இந்தியாவின் சில்லறை வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டங்களையும் முன்னெடுத்து போராடி வருகின்றார்கள்.

இங்கிலாந்தின் Maidenhead நகரில் லண்டன் வாழ் தமிழர்கள் பொங்கல் கொண்டாட்டம்

சர்வதேச அளவில் இ-காமர்ஸ் துறையின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் இந்தியாவில் சிறு, குறு வர்த்தக நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கம் செய்கின்ற பணிகளுக்காக, 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்.

இதையடுத்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் அமேசான் அறிவித்துள்ள முதலீடு இந்தியாவுக்கு நன்மை செய்வதாக இல்லை என்று கருத்து தெரிவித்தார். இது பல தரப்பிலிருந்தும் எதிர்மறையான கருத்துகளைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது. இந்த கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் ஹீல்ட் இதுகுறித்து கூறுகையில், “இந்திய அரசு வர்த்தக அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது அவசியம்தான்.

ஆனால், இ-காமர்ஸ் துறைகளில் புதிய முதலீடுகளை வரவேற்க வேண்டும். இந்தியா இ-காமர்ஸ் துறையை இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இந்திய நுகர்வோர்களுக்கு பலவகைகளிலும் நன்மை பயக்கக்கூடிய இ-காமர்ஸ் துறையை ஊக்குவிக்க வேண்டும்.

பாப்கார்ன் சாப்பிட்டது ஒரு பாவமா? – பிரிட்டனைச் சேர்ந்தவருக்கு நேர்ந்த சோகம்

இந்தியாவின் பொருளாதார சூழல் தற்போது மோசமாக உள்ளது. ஜிடிபி 5 சதவீதம், 4.5 சதவீதம் எனக் குறைந்துள்ளது. இந்நிலையில் இந்தியப் பொருளாதாரத்துக்கு வரப்பிரசாதமாக உள்ள இ-காமர்ஸ் துறையை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக சிறிய தொழில் நிறுவனங்களுக்கு தங்களின் பொருட்களை விற்பனை செய்ய இ-காமர்ஸ் துறை பெரிதும் உதவுகிறது.

இ-காமர்ஸ் துறையின் பலன்களைப் பலரும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் இ-காமர்ஸ் துறையில் தீவிரமாக இறங்கப்போவதாகத் தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. இ-காமர்ஸ் துறை பல வகைகளிலும் இந்தியப் பொருளாதாரத்துக்கு அவசியமாக உள்ளது. எனவே முதலீடுகளை வரவேற்க தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.