முன்கூட்டியே அமலுக்கு வருகிறது பெட்ரோல், டீசல் வாகனங்கள் தடை!

petrol, diesel, cars, பெட்ரோல், டீசல், வாகனம்
(Image: edie.net)

பிரிட்டனில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் விற்பனைக்கு 2030ம் ஆண்டு முதலை தடை விதிக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாசுக்கு முக்கிய காரணமாக வாகன போக்குவரத்து உள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுவதும் காற்று மாசுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் பிரிட்டனில் 2040ம் ஆண்டு முதல் பெட்ரோல் டீசல் வாகனங்கள் விற்பனையைத் தடை செய்வது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இப்படி செய்வதன் மூலம் 2050ம் ஆண்டு வாக்கில் பிரிட்டனில் வாகனங்கள் மூலம் வெளியாகும் மாசு பூஜ்ஜியம் அளவுக்கு குறைக்க திட்டமிடப்பட்டது.

மின்சார வாகனங்கள் வருகையைத் தொடர்ந்து 2040ம் ஆண்டு என்ற இலக்கை 2035ம் ஆண்டு ஆக போரிஸ் ஜான்சன் குறைத்தார்.

தற்போது மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாலும், பலரும் மின்சார வாகனங்களுக்கு மாறி வருவதாலும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் விற்பனையை 2030ம் ஆண்டு முதல் தடை செய்ய பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதை படிச்சீங்களா: கொரோனா பாதிப்பு இயல்புநிலைக்குத் திரும்ப ஓராண்டாகுமாம்!

தற்போது இங்கிலாந்தில் விற்பனையாகும் கார்களில் 73.6 சதவிகிதம் பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களாக உள்ளன. 5.5 சதவிகிதம் அளவுக்கு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை நடந்து வருகிறது.

இருப்பினும் மின்சார கார்கள் விற்பனை 7 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்து வருகிறது.

இங்கிலாந்தில் தொடர்ந்து மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரித்து வருவதாலும், பெட்ரோல், டீசல் வாகனங்கள் விற்பனை குறையத் தொடங்கியதாலும் இந்த முடிவை போரிஸ் ஜான்சன் எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மின்சார வாகனங்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கி வருகிறது. நாடு முழுவதும் மின்சார வாகனங்கள் மின்சாரத்தை சார்ஜ் செய்துகொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்க 500 மில்லியன் பவுண்டு செலவிடத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் வாகனங்களுக்கு மிக விரைவாக சார்ஜ் செய்யும் வசதியை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.

இதற்கான அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த வாரத்தில் வெளியிடுவார் என்று இங்கிலாந்தின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter

Related posts

யார்க்‌ஷேயர்: 36 டிகிரி வெயிலில் காருக்குள் நாயை பூட்டிச் சென்ற கொடூர உரிமையாளர்!

Editor

கொரோனா புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து லண்டனில் போராட்டம் – போலீஸ் மீது தாக்குதல்… 60 பேர் கைது!

Editor

சாக்வெல்: அத்துமீறி கூடிய இளைஞர்களுக்குள் மோதல்! – 2 மாணவர்களுக்கு கத்திக்குத்து

Editor