UK Weather Warning: இங்கிலாந்தில் 20க்கும் மேற்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை – முழு விவரம் இங்கே

UK Weather Warning - (Image Credit - Huffpost UK)
UK Weather Warning - (Image Credit - Huffpost UK)

UK Flood Warning: அட்லாண்டிக் கடலின் அடர்த்தியான மேகம் காரணமாக மழை பெய்ததால் பாக்ஸிங் தினம் வாஷ் அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து பிரிட்டன் அதிக ஈரமான வானிலை கொண்டதாக இருக்கிறது.

Boxing Day என்றால் என்ன? பிரிட்டனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

இந்நிலையில், சுற்றுச்சூழல் நிறுவனம் இங்கிலாந்தில் 30 வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டு, “உடனடி நடவடிக்கை தேவை” என்றும் குறிப்பிட்டுள்ளது. வடகிழக்கில் ஹல் முதல் தெற்கு கடற்கரையில் உள்ள சவுத்தாம்ப்டன் வரை இந்த எச்சரிக்கை அடங்குகிறது. ஏஜென்சியிலிருந்து தற்போது 67 வெள்ள எச்சரிக்கைகள் வெளியாகி உள்ளன. இது நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் பரவியுள்ளது. இது பிரிட்டனை “தயாராக இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கிறது.

சுற்றுச்சூழல் அமைப்பின் Flood duty மேலாளர் கிளேர் டென்னிஸ், “தெற்கு இங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் வசிக்கும் பிரிட்டனில் அடுத்த வார தொடக்கத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கலாம்” என்று எச்சரித்தார்.

மேலும் படிக்க – UK Bank and Public Holidays 2020: பிரிட்டனில் வங்கி, பொது விடுமுறை தினம் – ழுழு லிஸ்ட் இங்கே

அவர் தி சன் பத்திரிகையிடம் கூறுகையில், “சமீபத்திய மழைக்குப் பிறகும் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து உயர்கிறது. அதாவது அடுத்த சில நாட்களில் தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் நிலத்தடி நீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.

டெல்லி ஐஐடிக்கும் பிரிட்டன் அரசுக்கும் என்ன தொடர்பு? – இங்கிலாந்து ஆர்வம் காட்டாதது ஏன்?

“நாங்கள் தொடர்ந்து மழைப்பொழிவு மற்றும் நதி மட்டங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும் எங்கள் வெள்ளப் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். இதன் மூலம்,ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு வெள்ள அபாயத்தைக் குறைத்து மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறோம்” என்றார்.

வெள்ள அபாயம் குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை. இங்கிலாந்து அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.