அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு விரைவில் விசா – பிரிட்டன்

உலகில் மற்ற நாடுகளில் உள்ள அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைக் கவரும் வகையில் அவர்களுக்கு விரைவாக விசா வழங்கவுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உலக நாடுகளில் உள்ள அறிவியலாளர்களைப் பிரிட்டன் நோக்கிக் கவர்ந்திழுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.

விஜய் மல்லையாவுக்கு தொடர்புடைய சொத்துகளை விற்க பிரிட்டன் கோர்ட் உத்தரவு

அதன்படி, உலகின் பல பகுதிகளிலிருந்தும் அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், கணிதவியலாளர்கள் எனப் பல்துறை அறிஞர்களைப் பிரிட்டனுக்கு வரவேற்க புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு கண்டுபிடித்துள்ளது.

அதாவது பிரிட்டன் வரும் அறிஞர்களுக்கு விரைவாக விசா வழங்கப்படும்.

இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “விஞ்ஞான கண்டுபிடிப்பின் பெருமைமிக்க வரலாற்றை இங்கிலாந்து கொண்டுள்ளது, ஆனால் இந்தத் துறையை வழிநடத்துவதற்கும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கும் நாம் தொடர்ந்து திறமை மற்றும் அதிநவீன ஆராய்ச்சிகளில் முதலீடு செய்ய வேண்டும்” என்றார்.

மேலும், உலகளாவிய திறன்களைப் பிரிட்டனுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் இத்திட்டம் அறிமுகமாவதாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

பிரிட்டனின் தாமஸ் குக் ட்ராவல்ஸ் வீழ்ச்சி : இந்தியாவுக்கு பாதிப்பா?

வரும் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரப்போகிறது. இத்திட்டத்தின் கீழ் இத்தனை பேருக்கு மட்டுமே விசா கிடைக்கும் என்ற வரம்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

பிரிட்டனின் இந்த கொள்கையின் மூலம் ஆய்வு நிதி உதவி பெற்று பிரிட்டன் வருவோரின் எண்ணிக்கை கூடுவதற்கு வாய்ப்பு உருவாவதுடன் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் அந்நாட்டின் வேலை வாய்ப்புச் சந்தையில் இடம் தரப்படுகிறது.