பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளும் கொரோனா நெகட்டிவ் பரிசோதனை முடிவை காட்ட வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடனான பயண போக்குவரத்தை ரத்து செய்தன. பிரான்ஸ் இங்கிலாந்துடனான எல்லையை மூடியது.
அமெரிக்கா பயணத் தடை விதிக்கவில்லை என்றாலும் விமான சேவை எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டது.
இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து இங்கிலாந்துக்கு பயண சேவை தொடரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு வரை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையை காட்ட வேண்டும் என்று அது கூறியுள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் என்றாலும் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்று கூறுவதற்கோ, அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறிவருகின்றனர்.
இந்த சூழலில் அமெரிக்கா இந்த 72 மணி நேர கொரோனா பரிசோதனையை அமெரிக்காவின் சென்டர் ஃபார் டிசிஸ் கண்ட்ரோல் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து வரும் எந்த ஒரு பயணியும் பி.சி.ஆர் அல்லது ஆன்டிஜன் பரிசோதனை பயண செய்வதற்கு முன்பான 72 மணி நேரத்துக்குள் எடுத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை டிசம்பர் 28ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும்.
அமெரிக்காவின் சென்டர் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் இந்த அறிவிப்பை பிறப்பிப்பதற்கு முன்பு இருந்தே வெர்ஜின் அட்லான்டிக், டெல்டா ஏர்லைன் விமான நிறுவனங்கள் கொரோனா நெகட்டிவ் பரிசோதனை முடிவுகள் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.
அமெரிக்க விமான நிறுவனமான யுனைனட்டட் ஏர்லைன்ஸ் வருகிற 28ம் தேதியில் இருந்து கொரோனா நெகட்டிவர் பரிசோதனை முடிவை காட்டுவது கட்டாயமாக்கியுள்ளது.
புதிய வகை வீரியம் மிக்க கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் மிகக் கடுமையான கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் 85 சதவிகித மக்கள் மிகக் கடுமையான கட்டுப்பாடு பாதிப்பின் கீழ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…