கல்விக்கான சிறந்த நாடுகள் பட்டியலில் பிரிட்டன் இரண்டாமிடம் – முதலிடம் யாருக்கு தெரியுமா?

உலகெங்கிலும் இருந்து 20,000 பேரிடம் ஆய்வு நடத்தி ‘சிறந்த நாடுகள்’ 2020 தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற அம்சங்களை முன்வைத்து அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை என்ற பத்திரிக்கையும் பென்சில்வேனியா பல்கலைக்கழகமும் பாவ் என்ற உலகளாவிய ஆலோசனை மையமும் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரிக்கு வேலை தருகிறோம் – பர்கர் கிங் நிறுவனம்

“கல்விக்கான சிறந்த நாடு” பட்டியல் மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டது – நாடுகள் உயர்தர கல்வியை வழங்குகின்றனவா, நன்கு வளர்ந்த பொதுக் கல்வி முறையைக் கொண்டிருக்கின்றனவா, மக்கள் அங்கு பல்கலைக்கழகத்தில் சேருவதில் ஆர்வம் காட்டுகிறார்களா என்பதை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் முறையே இரண்டாவது முதல் ஐந்தாவது இடங்களைப் பிடித்த நிலையில், “வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உலகின் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் சிறந்த கல்வியை வழங்குவதாக அறிக்கை கூறுகிறது. அதாவது, அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

கல்விக்கு சிறந்தது என்று கருதப்படும் மீதமுள்ள முதல் 10 நாடுகள் அனைத்தும் ஆஸ்திரேலியாவைத் தவிர ஐரோப்பாவில் உள்ளன. ஆஸ்திரேலியா ஏழாவது இடத்தில் உள்ளது.

சுவிட்சர்லாந்து, சுவீடன், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் முறையே ஆறாவது, எட்டாவது, ஒன்பதாவது மற்றும் 10வது இடங்களைப் பிடித்தன.

சிறந்த கல்வி அளிக்கும் வெளிநாடுகள் தரவரிசையில், 2020 ஆம் ஆண்டிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் சிறந்த நாடான மலேசியா 11 வது இடத்திற்கு சரிந்தது.

வெளிநாட்டில் படிக்க சிறந்த நாடுகள் பட்டியல், 35 வயதிற்குட்பட்ட 8,500 க்கும் மேற்பட்டோரின் பதில்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவையாகும்.

‘உங்கள் சேவையால் மிகப்பெரிய மாற்றம்’- உருக்கமாக பொங்கல் வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்